ஆன்லைனில் மின் இணைப்பு எண்-ஆதார் எண் இணைக்கும் போது ஆதார் நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்நிலையில் நடைமுறையை எளிமைப்படுத்த ஆதார் எண் மட்டும் பதிவு செய்தால் போதும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் பெறுபவர்கள் என அனைத்து பயனர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அந்தந்தப் பகுதிகளில் உள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் இ.பி- ஆதார் எண் இணைக்க முதலில் மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிட வேண்டும். அடுத்து தொலைப் பேசி எண் பதிவிட்டப் பின் OTP வரும், அதை பதிவிட வேண்டும். திரையில் வரும் தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடைசியாக உங்கள் ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் குறிப்பிட வேண்டும். இதன் பின் உங்கள் தொலைப்பேசி எண்ணுக்கு மீண்டும் ஒரு OTP அனுப்பபடும். அதை மட்டும் குறிப்பிட்டு சப்மிட் கொடுத்தால் போதும். முன்பு ஆதார் எண்ணுடன் அதன் நகலையும் பதிவேற்ற வேண்டும். ஆனால் பயனர்கள் புகார், சிரமங்கள் இருப்பதாக தெரிவித்தப் பின் மின்வாரியம் இந்த நடைமுறையை எளிதாக்கியுள்ளது.நேற்று முதல் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil