/tamil-ie/media/media_files/uploads/2018/10/Capture-2.jpg)
Global Internet Shutdown : சமூக வலைதளங்களில் வரும் 48 மணி நேரங்களுக்கு இணைய தளம் முடக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா பொய்யா என்ற குழப்பமான மனநிலை அனைவரிடமும் நிலவி வருகிறது.
Global Internet Shutdown வதந்தி
ஆனால் அப்படி ஒன்றும் இணைய தள சேவைகள் முடங்காது என ICANN அமைப்பு கூறியிருக்கிறது. ரூட் கீ சிங்கிங் கீ ரோல் ஓவர் காரணமாக மட்டுமே இப்படியான ஒரு நிலை ஏற்படலாம். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஆனால் அதனுடைய க்ரிப்டோகிராபிக் கீக்களும் ஆகஸ்ட் மாதமே மாற்றப்பட்டு விட்டதால் இது போன்று இணைய சேவைகள் முடக்கம் அடையாது என இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்கு தகவலை பரிமாறியிருக்கிறது ICANN அமைப்பு.
ஆனால் வெள்ளிக்கிழமையில் இருந்து இந்தியா முழுவதும், பல்வேறு இடங்களில் இணைய சேவை முடக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் எப்பவும் போலவும் தங்களின் இணைய சேவையினை இந்த வார இறுதியில் பயன்படுத்தி மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.