2024 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புரதங்கள் பற்றிய ஆய்வு பணிக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வேதியியலுக்கான நோபல் பரிசு டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் பேக்கருக்கு கம்புடேஷனல் ப்ரோடீன் டிசைன் ஆய்வுக்காகவும், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் எம். ஜம்பர் ஆகியோருக்கு "புரத அமைப்பு கணிப்புக்காக" விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புரதங்களின் கட்டமைப்பை கண்டறியும் வழியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களுக்கு நோபல் விருது உடன் ரூ.8.39 கோடி பரிசு தொகை வழங்கப்படும். டிசம்பர் 10-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“