2024 Nobel Prize in Physiology or Medicine: மைக்ரோ ஆர்.என்.ஏ.,வைக் கண்டுபிடித்ததற்காகவும், டிரான்ஸ்கிரிப்ஷனலுக்குப் பிந்தைய மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கிற்காகவும் 2024 ஆம் ஆண்டிற்கான உடலியல் மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Nobel Prize in Medicine 2024: Victor Ambros and Gary Ruvkun win for discovery of microRNA
மைக்ரோ ஆர்.என்.ஏ என்பது மரபணு செயல்பாடு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நிர்வகிக்கும் ஒரு அடிப்படைக் கொள்கையாகும்.
விக்டர் ஆம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோரை கௌரவிக்கும் முடிவை அறிவித்த நோபல் பேரவை, அவர்களின் கண்டுபிடிப்பு "உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபிக்கிறது" என்று கூறியது.
ஸ்வீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நோபல் அசெம்பிளியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவத்திற்கான வெற்றியாளர்கள், 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரவுன்களை ($1.1 மில்லியன்) பெறுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் போலவே, மருத்துவத்திற்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்பட்டது, மற்ற ஐந்து பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் வரும் நாட்களில் வெளியிடப்படும்.
கூடுதல் தகவல்: ஏ.பி மற்றும் ராய்ட்டர்ஸ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“