நோக்கியா 5. 1 ப்ளஸ் : உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்துமா?

.இந்தாண்டில் இறுதியில் இந்த டிவைஸ்களுக்கு ஆண்டிராய்டு பை அப்டேட் கிடைக்கும்

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட் போன்கள்,இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் சியோமி ரெட்மி நோட் 5 , ரெட்மி ஒய்2, மோட்டோ ஜி 6 மற்றும் ஹானர் 9என் ஆகிய ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது

ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனம் கடந்த மாதம் நோக்கியா 5.1 பிளஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அறிமுகம் ஆன மறுநாளில் வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்டில் சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டன.

இந்த நோக்கியா 5.1 பிளஸ் போன்கள், நோக்கியா 6.1 பிளஸ் உடன் இணைந்து கடந்த மாதம் வெளியிடப்பட்டது. நோக்கியா 5.1 பிளஸ் போன்களில் பிளாடிக் பிரேம்களுடன் மெட்டல் சான்ட்விட்ச் கிளாஸ் பேனல் மதுரம் நானோ கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 5. 1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

நோட்ச் திரையுடன் வெளியிடப்படும் முதல் நோக்கியா போன் இதுவாகும். 5.86 இன்ச் HD திரையுடன் இருக்கும் இந்த போனின் ஸ்கிரீன் பார்மட் 19:9 ஆகும்.
3 அல்லது 4 அல்லது 6 ஜிபி RAMவுடன் வரும் இந்த போனை இயக்குகிறது மீடியாடெக் ஹெலியோ P60 ப்ரோசெஸ்ஸர் . 32ஜிபி அல்லது 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜுடன் வருகிறது இந்த போன்.

13MP மற்றும் 5MP என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 8MP முன்பக்க கேமராவுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது.

இந்த நோக்கியா ஸ்மார்ட்போனில் 3060எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தாண்டில் இறுதியில் இந்த டிவைஸ்களுக்கு ஆண்டிராய்டு பை அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close