ஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் - நோக்கியா 3.1 ப்ளஸ்

துல்லியமான போட்டோக்களை எடுக்க உதவும் வகையில் இதன் இரண்டு பின்பக்க கேமராக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நோக்கியா 3.1 ப்ளஸ் :  நோக்கியா தன்னுடைய மிட் பட்ஜெட் போனான நோக்கியா 3.1 ப்ளஸ்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6 அங்குல அளவு கொண்ட இந்த போனின் விற்பனை அக்டோபர் 19ல் இருந்து தொடங்குகிறது. நோக்கியா 8110 போனும் இந்த போனின் அறிமுக விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நோக்கியா 3.1 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் ஒன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதனால் மாதாந்திர செக்யூரிட்டி அப்டேஸ் மூன்று வருடங்களுக்கும், இயங்குதள அப்டேட் 2 வருடங்களுக்கும் கிடைக்கும். இரண்டு சிம்கார்டுகளை போடும் வசதியுடன் இந்த மொபைல் போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீலம், வெள்ளை மற்றும் பால்டிக் என மூன்று நிறங்களில் வருகிறது இந்த போன்.

இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன ?

ஆறு அங்குல இந்த ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே 2.5D தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபிஎஸ் ஆகும். மேட் பினிஷுடன் கூடிய அலுமினியம் பேக் கவர் இந்த போனிற்கு நல்ல திடமான வடிவத்தினை கொடுத்துள்ளது.

நோக்கியா 3.1 ப்ளஸ் கேமரா

இந்த போனின் பேக் கேமராக்கள் 13MP + 5MP திறனுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. செல்பி கேமரா 8 எம்.பி. ஆகும். இதில் இருந்து எடுக்கப்படும் போட்டோக்கள் மிகவும் துல்லியமானதாக இருக்கிறது. ஆனால் செல்பி கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் அத்தனை துல்லியமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹலோ P22 ஆக்டோ-கோர் ப்ரோசஸ்ஸர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2GB/3GB RAM மற்றும் 16GB/32GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் கூடிய வேரியண்ட்கள் வெளியாகிறன.

பேட்டரி திறன் 3500mAh ஆகும். ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்துடன் வெளியாகியுள்ள முதல் போன் இதுவாகும் என்பதால் ஏற்கனவே மார்கெட்டில் இருக்கும் போன்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் இந்த நோக்கியா 3.1 ப்ளஸ்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close