/indian-express-tamil/media/media_files/2025/05/11/LVziJ72wj2rPZHBG3TK2.jpg)
நோக்கியா தரப்பில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள 3210 4ஜி போன் தற்போது ரூ.1760 தள்ளுபடியில் ரூ. 3,539-க்கு கிடைக்கிறது. ஃபிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் விற்பனையாகும் இந்த போன் கருப்பு, நீலம் மற்றும் கோல்ட் வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த போனில் இரண்டு 4ஜி சிம் கார்டுகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, யு.பி.ஐ செயலிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர யூடியூபும் இந்தப் போனில் இடம்பெற்றுள்ளது. மேலும், 32 ஜி.பி வரை இதில் மெமரி கார்ட் போட்டுக் கொள்ளலாம். கூடுதலாக எஃப்.எம் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.
நோக்கியா 3210 போனில் யுனிசாக் டி10 டிஸ்பிளே உள்ளது. இது மட்டுமின்றி எஸ்30பிளஸ் இயங்குதளம் இருப்பதால் பயன்பாட்டிற்கு இலகுவாக இருக்கும். இதற்கு ஏற்றார் போல் 28 எம்.பி ரேம் மற்றும் 64 எம்.பி ஸ்டோரேஜ் உள்ளது.
மேலும், ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்று சில பிரத்தியேகமான அம்சங்களும் நோக்கியா 3210 போனில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, யூடியூப் மற்றும் யூடியூப் மியூஸிக் இதில் இடம்பெறுகிறது. பொழுதுபோக்கை பொறுத்த வரை, கிளாஸிக் ஸ்னேக் கேம், கிரிக்கெட் ஸ்கோர், வானிலை, சோகோபன், டெட்ரிஸ் ஆகிய செயலிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், ப்ளூடூத் 5.0 உள்ளது. கூடுதலாக, எஃப்.எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 3.5 மி.மீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளன. 1450 எம்.ஏ.ஹெச் பேட்டரி இடம்பெறுகிறது. அந்த வகையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு இணையான சில வசதிகள், இந்த ஃபீச்சர் போனிலும் உள்ளது.
எனவே, விலை குறைவாகவும், வசதிகள் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நோக்கியா 3210 போனை பரிசீலிக்கலாம். ஃப்ளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் இருந்து இந்த போனை வாங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.