Nokia 4.2 specifications : இந்தியாவில் இன்று அறிமுகமானது எச்.எம்.டி க்ளோபளின் நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன். சிங்கிள் வேரியண்ட்டாக வெளியான இந்த போனை ஏற்கனவே மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம் செய்து வைத்திருந்தது அந்நிறுவனம்.
ஆண்ட்ராய்ட் ஒன் - நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜூடன் உள்ளது. நோக்கியா 4.2 அடுத்த ஏழு நாட்களுக்கு Nokia.com/phones இணையத்தில் கிடைக்கும். மே 14ம் தேதி முதல் க்ரோமா, ரிலையன்ஸ், சங்கீதா, பூர்விகா, பிக்சி, மற்றும் மிக் ஆகிய அவுட்லெட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
Nokia 4.2 launch offers
நோக்கியா இந்தியா இணையதளத்தில் LAUNCHOFFER என்ற கோடினை பயன்படுத்தி ஜூன் 10ம் தேதி வரை சிறப்புத் தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்களை பெற்றுக் கொள்ளலாம். 500 ரூபாய் தள்ளுபடியை இதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
எச்.டி.எஃப்.சி க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் வாடிக்கையாளர்கள் மேலும் 10% கேஷ்பேக்கினை பெற்றிட முடியும். ரீடைல் ஷோரூம்கள் மற்றும் இணையத்தின் வாயிலாகவும் இந்த சலுகையினை பெற்றிட இயலும்.
Nokia 4.2 specifications
5.71 இன்ச் எச்.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
அஸ்பெக்ட் ரேசியோ 19:9
இதன் மேலே வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் கொண்டுள்ளது
குவால்கோம் 439 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த போன்.
13 எம்.பி + 2 எம்.பி பின்பக்க கேமராவையும், 8 எம்.பி செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.
பேட்டரி 3,000mAh செயல்திறன் கொண்டுள்ளது இந்த போன்.
விலை : Rs 10,990
மேலும் படிக்க : ஆப்பிளின் லேட்டஸ்ட் போனுக்கு இவ்வளவு தள்ளுபடியா ? ஆடிப்போன ப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் !