/tamil-ie/media/media_files/uploads/2018/10/nokia-51plus-cpoy.jpg)
நோக்கியா 5.1 ப்ளஸ்
Nokia 5.1 Plus Flipkart Sale : நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இன்று முதல் தொடங்குகிறது. கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போனின் முதல் விற்பனையே இன்று தான் தொடங்குகிறது. இதற்காகவே நோட்டிஃபை மீ என்ற பக்கத்தினை ஓப்பன் செய்து வைத்திருக்கிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம். 10,999 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கும் இந்த போனை வாங்க சில சலுகைகளையும் அளித்திருக்கிறது ப்ளிப்கார்ட்.
நோக்கியா 5.1 ப்ளஸ் விற்பனை ப்ளிப்கார்ட் இணையம் வழங்கும் ஆஃபர்கள்
ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் நோக்கியா போனை வாங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 1800 ரூபாய் வரை கேஷ்பேக் அளிக்கப்படும் என்று அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
120ஜிபி வரை ப்ரீடேட்டாவை வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பெறலாம். விற்பனை தொடங்கிய பின்னரே EMI மற்றும் பிறசேவைகளை மிக விரைவில் அறிவிக்க இருப்பதாக ப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியிருக்கிறது.
To Read this article in English
நோக்கியா 5.1 ப்ளஸ் சிறப்பம்சங்கள்
நோட்ச் திரையுடன் வெளியிடப்படும் முதல் நோக்கியா போன் இதுவாகும். 5.86 இன்ச் HD திரையுடன் இருக்கும் இந்த போனின் ஸ்கிரீன் பார்மட் 19:9 ஆகும்.
3 அல்லது 4 அல்லது 6 ஜிபி RAMவுடன் வரும் இந்த போனை இயக்குகிறது மீடியாடெக் ஹெலியோ P60 ப்ரோசெஸ்ஸர் . 32ஜிபி அல்லது 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜுடன் வருகிறது இந்த போன்.
13MP மற்றும் 5MP என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 8MP முன்பக்க கேமராவுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.