/tamil-ie/media/media_files/uploads/2018/07/nokiax6_new_3.jpg)
Nokia 6.1 Plus
Nokia X6 aka 6.1 Plus launch in India:
நாட்ச் திரையுடன் வெளிவந்த முதல் நோக்கியா போன் நோக்கியா X6. கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகமானது இந்த போன். இதனுடைய சர்வதேச மாடலான நோக்கியா 6.1 ப்ளஸ் பல்வேறு நாடுகளில் நாளையில் இருந்து அறிமுகமாக இருக்கிறது.
இந்தியாவில் எப்போது நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட் போன் வரும் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு வரமாக வந்து சேர்ந்திருக்கிறது நோக்கியா 6.1 ப்ளஸ். வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் அறிமுகமாகலாம் என தகவல் தெரிவித்துள்ளது. தேதி எதுவும் குறிப்பிடாமல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலுடன் இணைய தளம் ஒன்றில் பதிவிட்டிருக்கிறது நோக்கியா நிறுவனம்.
சிறப்பம்சங்கள்
5.8 அங்குல் ஃபுல் எச்.டி திரையினை கொண்டது இந்த போன். உலோகத்தினால் ஆக்கப்பட்ட இந்த போனின் ஸ்கிரீன் பார்மட் 19:9 ஆகும். இந்த பெரிய திரையினை கொண்டுள்ள நோக்கியா 6.1 ப்ள்ஸ் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ரோசஸ்ஸரில் இயங்கி வருகிறது. 16 எம்பி மற்றும் 5எம்பி என இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது இந்த போன். 5எம்பி முன்பக்க கேமராவினை கொண்டிருக்கிறது.
பேட்டரி பேக்கப் 3060 mAh ஆகும். 4ஜிபி மற்றும் 6ஜிபி வேரியண்ட்டுகளில் 32ஜிபி அல்லது 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் உடைய போன்களாக சந்தைப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.