நோக்கியாவின் அடுத்த ஸ்மார்ட்போன் வெளியீடு எங்கே?

தங்களுடைய வாடிக்கையாளர்கள் அனைவரையும் காத்திருக்கச் சொல்லி ஹிண்ட் தரும் நோக்கியா

நோக்கியா ஸ்மார்ட்போன்கள், நோக்கியா,
இந்தியாவில் வெளியாக இருக்கும் நோக்கியா 6.1 ப்ளஸ்

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் மதிப்பே தனிதான். நோக்கியா என்றுமே மக்களுக்கான போனாகவே இருந்து வந்தது. லுமியா போன்களை வெளிவந்த பின்னால் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பினை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது.

மீண்டு வந்த நோக்கியா தன்னுடைய ஸ்மார்ட்போன்களை ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்கியது. இந்தியாவில் அடுத்து தன்னுடைய சந்தையினை விரிவு செய்யும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது  எச்.எம்.டி குளோபல் (HMD Global).

நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வரிசையில் வர இருக்கும் நோக்கியா 6.1 ப்ளஸ்

சமீபத்தில் தன்னுடைய புதிய திறன்பேசியான நோக்கியா எக்ஸ்6 – னை ஹாங்காங்கில் வெளியிட்டது. இந்த மாடலின் சர்வதேச பெயராக நோக்கியா 6.1 ப்ளஸ் இருக்கிறது.

இந்தியாவில் இந்த நோக்கியா ஸ்மார்ட்போன்கள் எப்போது வெளிவரும் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஹிண்ட்டு கொடுத்து வருகிறது நோக்கியா நிறுவனம். இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் காத்திருப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது நோக்கியா நிறுவனம்.

நோக்கியா 6.1 ப்ளஸ் சிறப்பம்சங்கள் என்ன?

5.8 அங்குல ஃபுல் எச்.டி திரையுடன் வர இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

இதன் ரெசலியூசன் 2280×1080 பிக்சல்கள் ஆகும்.

குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ரோசசருடன் வரும் இந்த போனில் ஆட்ரெனோ 509 கிராபிக்ஸ் ப்ராசசர் யூனிட்டும் இருக்கிறது.

4GB of RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும்.

3060mAh திறன் கொண்ட பேட்டரியை போனில் இருந்து வெளியில் எடுக்க இயலாது.

16MP + 5MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 16MP செல்பி கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

இதர சிறப்பம்சங்கள்

4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, a 3.5mm headphone jack, மற்றும் USB Type-C port ஆகியவை இந்த ஸ்மார்ட்போனில் இணைத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nokia 6 1 plus with 199 aspect ratio display to launch next in india

Next Story
ஒரு ட்ரில்லியன் டாலர் சந்தை மதிப்பினை எட்டியது ஆப்பிள் நிறுவனம்ஆப்பிள் நிறுவனம், சந்தை மதிப்பு, டிம் குக்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X