/tamil-ie/media/media_files/uploads/2018/10/nokia-6-1-plus-main-11.jpg)
நோக்கியா 7.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுக விழா,
நோக்கியாவின் புதிய நோக்கியா 7.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இன்று லண்டலின் அறிமுகமாக இருக்கிறது என ஏற்கனவே எச்.எம்.டி குளோபல் அறிவித்திருந்தது. இந்த போனின் அறிமுக விழா இன்று இரவு 9.30 இந்திய மணி அளவில் லண்டனில் நடைபெற இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வின் ஒவ்வொரு நொடிகளையும் நீங்கள் ரசித்து பார்க்க வழிவகை செய்திருக்கிறது நோக்கியா. இந்த போனின் அறிமுக விழாவினை யூட்யூப் மூலம் நேரலையாக மக்களிடம் சென்று சேர்க்க உள்ளது எச்.எம்.டி குளோபல். இந்த நிகழ்ச்சியை எப்படி லைவ் ஸ்ட்ரீமாக பார்ப்பது என்று விளக்குகிறது இந்த செய்தி.
நோக்கியா 7.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுக விழா : லைவ் ஸ்ட்ரீம் மற்றும் அதற்கான நேரம்
இங்கிலாந்து நேரப்படி மாலை 5 மணி (இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு) தொடங்குகிறது இந்த விழா. நோக்கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கம் மூலமாக இந்த நிகழ்ச்சியை நீங்கள் நேரில் காண இயலும்.
நோக்கியா 7.1 ப்ளஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 399 யூரோ அதாவது 33, 680 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது. 19.9 ஃபார்மெட் திரையில் நோட்ச் வசதி செய்து தரப்பட்டிருக்கிறது. 5.84 இன்ச் ஃபுல் எச்.டி திரை கொண்ட இந்த போன் இரண்டு வேரியேசன்களுடன் வருகிறது. ஒன்று 4GB RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ் மற்றொன்று 3GB RAM மற்றும் 32GB ஆகும்.
ஒரே அறிமுக விழாவில் இரண்டு வேரியேசன்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற 11ம் தேதி இந்தியாவிலும் ஒரு நோக்கியா ஃபோனின் அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது எச்.எம்.டி குளோபல். ஆனால் எந்த போனை வெளியிடப் போகிறது என்ற் தகவல் மட்டும் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.