டிசம்பர் 7 முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.

எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nokia 7.1

Nokia 7.1

Nokia 7.1  : நோக்கியா 7.1 ஆண்ட்ராய்ட் ஒன் போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது நிறுவனம். ப்யர்-டிஸ்ப்ளே திரை மற்றும் செய்ஸ் ஆப்டிக்ஸ் (Zeiss Optics) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த போன். இந்த போனின் விலை ரூ. 19,999 ஆகும். டிசம்பர் 7ம் தேதியில் இருந்து விற்பனைக்கு வருகிறது இந்த போன்.

Advertisment

Nokia 7.1  சிறப்பம்சங்கள்

  • 5.84 இன்ச் ஃபுல் எச்.டி - டிஸ்ப்ளேவுடன் வெளியாக உள்ளது இந்த போன். ப்யர் டிஸ்பிளே ஸ்கிரீன் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • ஆண்ட்ராய்ட் 9 பை இயங்கு தளத்தில் இயங்குகிறது இந்த போன்
  • மிட்நைட் ப்ளூ மற்றும் க்ளோஸ் ஸ்டீல் என இரண்டு கலர் வேரியண்ட்டுகளில் வெளியாகிறது இந்த போன்.
  • குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 636 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
  • 3060 mAh பேட்டரி, 400ஜிபி வரை ஸ்டோரேஜை எக்ஸ்டெண்ட் செய்யும் வகையில் மைக்ரோ எஸ்.டி பொருத்தும் வசதி, சார்ஜிங்கிற்காக யூ.எஸ்.பி டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

Nokia 7.1 கேமரா சிறப்பம்சங்கள்

Advertisment
Advertisements

12 எம்.பி ப்ரைமரி கேமரா மற்றும் 5 எம்.பி செகண்டரி சென்சார் கொண்ட பின்பக்க கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. செல்பி கேமராவின் செயல்திறன் 8 எம்.பி ஆகும்.

சிறப்பு சலுகைகள்

ஏர்டெல் நிறுவனம் 1டிபி 4ஜிபி டேட்டாவினை இலவசமாக தருகிறாது. அதே போல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 120 ஜிபி டேட்டாவை இலவசமாகவும், மூன்று மாதங்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் சேவையை இலவசமாகவும் வழங்கப் போகிறது. எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்ட் மூலம் இந்த போனை வாங்கினால் 10 % கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : உலகின் முதல் கேமிங் போன் 

Nokia

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: