நோக்கியா நிறுவனம் அண்மையில் புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கென அறிமுக நிகழ்வை பேஸ்புக் நேரலையாகவும் வெளியிட்டிருந்தது . மற்ற எந்த ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத வகையில் 6 இன்ச் திரையுடன், அலுமினிய வெளிப்புற வடிவமைப்புடன் கலக்கலாக வெளியாகியுள்ளது.
நோக்கியா 7 ப்ளஸ்-ன் இந்திய விலை நிர்ணயமானது ரூ.23,000 தொடங்கி ரூ,25,000/-க்குள் அடையும் என்பது ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுருந்தது. இந்நிலையில், நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன.? என்பதை விரிவாக காண்போம்.
செயற்கை நுண்ணறிவு, நவீன போட்டோகிராபி மற்றும் முக்கியமாக மேம்படுத்தப்பட்ட கேமிங் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்டது ஸ்னேப்டிராகன் 660 SoC. மேலும் நோக்கியா 7 ப்ளஸ்-ல் 4GB ரேம் மற்றும் 3800mAh பேட்டரியும் உள்ளது
நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் 18:9 ரக ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், டூயல் பிரைமரி கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், மேெட்டல் யுனிபாடி வடிவைப்பு, 6000 சீரிஸ் அலுமினியம் மற்றும் 3800 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பமசங்கள்:
– 6.0 இன்ச் 2160×1080 ஃபுல் ஹெச்டி பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ்
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3800 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்