/tamil-ie/media/media_files/uploads/2018/01/nokia-7-1.jpg)
ஃபோன் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நோக்கியா7 பிளஸ் ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களம் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட் ஃபோன்களின் வரவு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனாளர்களின் தேவைகளை உணர்ந்து களத்தில் இருக்கும் பல்வேறு மொபைல் நிறுவனங்களும் அதிக மெமரி ஸ்பேஸ், செல்ஃபி கேமரா, ஆடியோ தரம் என எல்லாவற்றிலும், பல்வேறு புதுமைகளை புகுத்தி புதிய புதிய மாடல்களில் ஸ்மார்ட்ஃபோன்களை வெளியிட்டு வருகிறது. அதற்கேற்ப மொபைல் பிரியர்களும் தங்களுக்கு விருப்பமான மொபைல் ஃபோன்களை வாங்கி குவித்து வருகின்றன.
இந்நிலையில், புகழ்பெற்ற மொபைல் நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நிறுவனம், தனது அடுத்த வரவான நோக்கியா7 பிளஸ் மாடலை வரும் பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாடலின் முந்தைய வரவான நோக்கியா 7 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள எம்டபள்யுசி 2018 நிகழ்ச்சியில் நோக்கியா 7 பிளஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் மொபைல் பயனாளர்களை வெகுவாக கவரக்கூடிய, ஸ்னாப்டிராகன் 660 மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் களம் இறங்குவதாக செய்திகள் பரவியுள்ளன. அதே போல் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது. அதே போல் நோக்கிய 7 பிளஸ் மாடலில் உள்ள கேமரா, நோக்கிய 7 மாடலில் உள்ளது போன்றே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.