Advertisment

பட்ஜெட் பத்மநாபன்களே... ரூ5000 விலைக்குள் அற்புத போன்கள்!

Best phones under rs 5000 : ரூபாய் 4,800/- க்கு அமேசானில் கிடைக்ககூடிய Coolpad Cool 3 மாடல் கைபேசி இந்த விலைக்கு கிடைக்ககூடிய ஒரு நல்ல கைபேசியாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nokia, Coolpad, smartphone, low budget phones, best phones under rs 5000, phones under rs 5000, nokia 1 price in india, jiophone 2 price in india, meizu c9 pro price in india, redmi go price in india, coolpad cool 3 price in india, best smartphones, nokia, nokia news, nokia news in tamil, nokia latest news, nokia latest news in tamil

Nokia, Coolpad, smartphone, low budget phones, best phones under rs 5000, phones under rs 5000, nokia 1 price in india, jiophone 2 price in india, meizu c9 pro price in india, redmi go price in india, coolpad cool 3 price in india, best smartphones, nokia, nokia news, nokia news in tamil, nokia latest news, nokia latest news in tamil

Budget Phones In India: மக்கள் ஒருவருக்கொருவர் இணைந்து இருப்பதற்கான ஒரே வழி என்பதால் நிறைய பேர் இந்த நாட்களில் ஒரு புதிய கைபேசியை வாங்க விரும்புகிறார்கள். சில வாடிக்கையாளர்கள் வீட்டு சூழலில் இருந்து வேலை பார்ப்பதற்காக கைபேசியை வாங்க நினைக்கின்றனர். மேலும் சிலர் இந்த ஊரடங்கு காலத்தில் தங்களது கைபேசியை உடைத்து விட்ட காரணத்தால் புதிதாக ஒன்றை வாங்க நினைக்கின்றனர்.

Advertisment

என்ன காரணமாக இருந்தாலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு கைபேசியை உங்கள் பட்ஜெட்டுக்குள் கண்டுபிடிப்பது ஒரு கடினமான வேலை தான், அதுவும் உங்கள் பட்ஜெட் ரூபாய் 5,000/- ஆக இருக்கும் பட்சத்தில். உங்கள் வேலையை எளிதாக்குவதற்காக இந்தியாவில் கிடைக்ககூடிய ரூபாய் 5,000/- க்குள் சிறப்பாக செயல்படக்கூடிய கைபேசிகளை பட்டியலிட்டுள்ளோம்.

Nokia 1

நோக்கியா இப்போது ரூபாய் 4,672/- க்கு கிடைக்கிறது. Google’s Android Go operating system ல் இயங்கக்கூடிய இந்த கைபேசி நல்ல தயாரிப்பு தரத்தை கொண்டுள்ளது. 4.5-inch டிஸ்ப்ளே மற்றும் 1GB RAM/8GB internal storage மற்றும் 5MP பின்பக்க கேமரா மற்றும் 2MP முன்பக்க கேமரா மற்றும் 2,150mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த மாடல் கைபேசி முதலில் பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது எனவே இது இரண்டு வருடம் பழைய மாடல் கைபேசி என்பதை வாங்கும்போது மறந்துவிடக் கூடாது.

 

publive-image

JioPhone 2

ஜியோபோன் 2, ஆண்ட்ராய்டில் செயல்படக்கூடிய ஒரு டச் ஸ்கிரீன் கைபேசியாக இல்லாவிட்டாலும் அதன் அனைத்து அம்சங்களையும் கணக்கில் கொண்டு அது ஒரு ஸ்மார்ட் கைபேசியாக தான் கருதப்படுகிறது. இந்த கைபேசியில் 2.4-inch QVGA TFT டிஸ்ப்ளே மற்றும் Qwerty style keyboard உள்ளது. மேலும் இது KaiOS ல் இயங்குகிறது மேலும் Google Assistant, Facebook, WhatsApp போன்ற ஆப்களை ஆதரிக்கிறது. இந்த கைபேசியில் பின்பக்கம் 2MP கேமரா மற்றும் முன்பகுதியில் 0.3MP கேமரா உள்ளது. மேலும் இந்த கைபேசியில் உள்ள 2,000mAh பேட்டரியின் காரணமாக கைபேசி 15 நாட்கள் வரை நீடித்து இருக்கும் என நிறுவனம் கோருகிறது.

 

publive-image

Meizu C9 Pro

தற்போது Meizu C9 Pro மாடல் கைபேசி அமேசானில் ரூபாய் 4,290/- க்கு கிடைக்கிறது. இதில்1440×720 pixels resolution உடன்கூடிய 5.45-inch டிஸ்ப்ளே உள்ளது. மேலும் 1.3GHz quad-core processor உடன் ஜோடியாக 3GB RAM மற்றும் 32GB storage உள்ளது. Google’s Android 8.0 Oreo operating system ல் இயங்கக்கூடிய இந்த கைபேசியில் 3,000mAh பேட்டரியும் உள்ளது. பின்பகுதியில் 13MP கேமரா மற்றும் செல்பி எடுப்பதற்காக முன்பகுதியில் 8MP கேமராவும் உள்ளது.

Redmi Go

ரூபாய் 4,999/- க்கு Android Go வில் இயங்கக்கூடிய Xiaomi ன் ஒரே ஸ்மார்ட் கைபேசி Redmi Go மட்டும்தான். இதில் Qualcomm Snapdragon 425 processor உடன் ஜோடியாக 5-inch HD டிஸ்ப்ளே உள்ளது. 1GB RAM மற்றும் 8GB internal storage உடன் வரும் இந்த மாடல் கைபேசி Google’s Android 8.1 Oreo (Go Edition) மென்பொருளில் இயங்குகிறது. பின்பக்கத்தில் 8MP முதன்மை கேமரா மற்றும் செல்பி எடுப்பதற்காக 5MP கேமரா மற்றும் 3,000mAh பேட்டரி இதில் உள்ளது.

publive-image

 

Coolpad Cool 3

ரூபாய் 4,800/- க்கு அமேசானில் கிடைக்ககூடிய Coolpad Cool 3 மாடல் கைபேசி இந்த விலைக்கு கிடைக்ககூடிய ஒரு நல்ல கைபேசியாகும். இது 5.7-inch HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது மேலும் முன்பக்க கேமராவுக்கு இடமளிக்கும் வகையில் teardrop style notch உள்ளது. 1.6Ghz octa-core processor உடன் ஜோடியாக 2GB RAM மற்றும் 16GB internal storage உள்ளது. Google’s Android 9.0 Pie operating system இயங்கக்கூடிய இந்த கைபேசியில், பின்பக்கத்தில் dual கேமரா setup ல் 8MP முதன்மை கேமரா மற்றும் 0.3MP இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில் செல்பி எடுப்பதற்காக 5MP கேமரா உள்ளது மேலும் 3,000mAh பேட்டரியும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Nokia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment