ரூ.2,949 விலையில் நோக்கியா 4ஜி: நம்புங்க… நிஜம்!

நோக்கியா 215 4ஜி போனில் கேமரா இல்லை ஆனால், நோக்கியா 225 4ஜி மொபைலின் பின்புறத்தில் 0.3MP கேமரா இருக்கிறது.

By: October 22, 2020, 8:03:38 AM

Nokia New Mobile Launch Tamil New: நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி ஆகிய இரண்டு புதிய 4ஜி அம்ச தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது எச்எம்டி குளோபல். இந்த இரண்டு புதிய சாதனங்களும் 4ஜி VoLTE அழைப்பு ஆதரவு, வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, 24 நாட்கள் ஸ்டாண்ட்பை மற்றும் பல அம்சங்களோடு வருகின்றன. சியான் கிரீன் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும் நோக்கியா 215 4ஜியின் விலை ரூ.2,949. கிளாசிக் ப்ளூ, மெட்டாலிக் சாண்ட், கருப்பு நிறங்களில் வரும் நோக்கியா 225 4ஜியின் விலை ரூ.3,499.

நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி ஆகிய இந்த இரண்டு மொபைல்களும் இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நவம்பர் 14 முதல் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் நோக்கியா 215 4ஜி கிடைக்கும். மேலும், இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்டோபர் 23 முதல் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா நிறுவனத்தின் இணையதளத்தில் அக்டோபர் 23 முதல் நோக்கியா 225 4ஜி கிடைக்கும். இது, நவம்பர் 6 முதல் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகவும் கிடைக்கும்.

நோக்கியா 215 4ஜி, நோக்கியா 225 4ஜி: விவரக்குறிப்புகள்

புதிய நோக்கியா 215 4 ஜி மற்றும் நோக்கியா 225 4 ஜி இரண்டும் ஒரே போன்ற விவரக்குறிப்புகளுடன் வருகின்றன. 2.4 அங்குல QVGA டிஸ்ப்ளே மற்றும் தொலைபேசிகளுக்காக உருவாக்கப்பட்ட RTOS அடிப்படையிலான சீரிஸ் 30+ இயக்க முறைமையை கொண்டு இயங்குகின்றன. மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 128MB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இந்த சாதனங்கள் வருகின்றன. இவை இரண்டும் 4 ஜி VoLTE, புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, நிறுவப்பட்ட எம்பி 3 பிளேயர், வீடியோ கேம்ஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்களோடு வருகின்றன.

நோக்கியா 215 4ஜி போனில் கேமரா இல்லை ஆனால், நோக்கியா 225 4ஜி மொபைலின் பின்புறத்தில் 0.3MP கேமரா இருக்கிறது.

நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 2254 ஜி ஆகிய இரண்டும் கடினமான பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. 90.3 கிராம் எடையில் நோக்கியா 215 4ஜி மொபைலும் 90.1 கிராம் எடையில் நோக்கியா 225 4ஜி மொபைலும் வருகின்றன.

அவை, 1,150mAh நீக்கக்கூடிய பேட்டரியுடன் வருகின்றன. இதன் மூலம் சாதனங்கள் 24 நாட்கள் ஸ்டாண்ட்பை  நேரத்தை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Nokia launches new 4g phones at very low prices nokia tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X