நோக்கியா மிகப் பிரபலமான செல்போன் நிறுவனமாகும். நிறுவனம் அண்மையில் ஸ்மார்ட் போன்கள் வெளியிட்ட நிலையில், தற்போது பட்ஜெட் விலை டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மாணவர்கள், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் ரூ.16,499 விலையில் Nokia T21 டேப்லெட்டை அறிமுகப்படுத்தியது. இதன் செயல்பாடு குறித்தும், விலைக்கு தகுந்த அம்சங்கள் உள்ளதா, இதே விலையில் Oppo Pad Air, Realme Pad மற்றும் Redmi Pad போன்ற டேப்லெட்களுடன் எவ்வாறு தனித்திருக்கிறது என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
நோக்கியா T21 டேப்லெட்
நோக்கியா T21 டேப்லெட் இதன் முந்தைய வெர்ஷனான Tab T20-ல் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. Unisoc T612 மூலம் இயக்கப்படுகிறது. கேமரா மற்றும் ஸ்டோரேஜ் அம்சத்தில் மாற்றம் செய்துள்ளது. ப்ராஸசர் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே வேளையில், டேப்லெட் இப்போது Widevine L1 சான்றிதழைப் பெறுகிறது, இது நெட்ஃபிக்ஸ் போன்ற பிரபலமான OTT தளங்களில் FHD மூலம்
ஸ்ட்ரீம் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது.

டிசைன் மற்றும் டிஸ்பிளே
நோக்கியாவின் T21 அலுமினிய வடிவமைப்பில் பிரீமியம் லுக் கொண்டுள்ளது. உருவாக்க தரம் உயர்மட்டத்தில் உள்ளது. டேப்பின் வலது பக்கத்தில், மேலே வால்யூம் பட்டன்கள் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. டேப்லெட்டின் மேல் வலது பக்கம் பவர் பட்டன் மற்றும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன, அதே சமயம் கீழே மற்ற இரண்டு ஸ்பீக்கர்கள், ஒரு USB டைப்-சி போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை உள்ளன.

நோக்கியா T21 10.4-இன்ச் எல்சிடி மற்றும் முழு எச்டி+ resolution கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 out of the box அம்சத்தில் இயங்கும் நோக்கியா T21 HMD நோக்கியா ஃபோன்களில் உள்ள அனுபவம் போல் உள்ளது. சாதனம் Widevine L1 சான்றிதழைப் பெற்றாலும், பயனர்கள் Netflix போன்ற OTT தளங்களில் முழு HD ஸ்ட்ரீமிங் சில நேரங்களில் அனுமதிக்கவில்லை. 720p resolution மட்டுமே பெற முடிகிறது. இது ஒரு மென்பொருள் பிழையாக இருக்கலாம். எதிர்காலத்தில் இதை நிறுவனம் சரிசெய்யும் என நம்பபடுகிறது.
ஆடியோ மற்றும் பேட்டரி
Nokia T21 ஆனது Ozo பிளேபேக்குடன் கூடிய ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. அவை இந்த டேப்பிற்கு பொருத்தமாக உள்ளது. திரைப்படம் பார்க்க சூப்பரான அனுபவமாக உள்ளது. பாடல்கள் கேட்பதற்கும் சிறந்த அனுபவமாக உள்ளது. 8,000mAh பேட்டரி கொண்டுள்ளதால், உங்கள் பயன்பாடு பொறுத்து பேட்டரி 1 முதல் 2 நாட்கள் வரை நீடிக்கும். அதிகபட்சமாக 18W சார்ஜிங் கொண்டுள்ளது. அதாவது சாதனம் முழுமையாக சார்ஜ் செய்ய கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஆகும்.

Nokia T21 tablet: வாங்கலாமா?
இதன் முந்தைய வெர்ஷன் போல் Nokia T21 டேப்பும் வீடியோ, பாடல்கள், ebooks படிப்பதற்கு நன்றாக உள்ளது. இந்த பயன்பாடுகளுக்கு வாங்குகிறீர்கள் என்றால் நோக்கியா T21 ஒரு நல்ல தேர்வாகும். அதேசமயம் Oppo Pad Air, ரெட்மி பேட் மற்றும் ரியல்மி பேட் போன்ற இதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் நோக்கியாவின் சமீபத்திய entry-level டேப் பிரீமியம் லுக் கொண்டுள்ளது. ஆனால் செயல்திறன் அவ்வளவு சிறப்பாக இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil