இவ்ளோ கம்மி விலைக்கு புதிய மாடல் போன்… நோக்கியாவை அடிச்சுக்க முடியாது!

Nokia phones : பேட்டரி ஆயுள் 4 முதல் 5 நாட்கள் வரை வருகிறது எனவே பயணங்களின் போது இந்த கைபேசி மிகவும் உதவிகரமாக இருக்கும்.

corona virus, social distancing, nokia, nokia 5310, nokia 5310 2020, nokia 5310 xpressmusic, nokia 5310 review, nokia 5310 price in india, nokia 5310 features, nokia 5310 2020, Nokia retro phones, nokia news, nokia news in tamil, nokia latest news, nokia latest news in tamil
Nokia Tamil News Nokia new model mobile phone Nokia 5310 price, features- நோக்கியா பட்ஜெட் போன்கள்

Nokia 5310 price, features: நோக்கியா  பிராண்டை தற்போது சந்தைப்படுத்தும் பின்லாந்தை சேர்ந்த தொடக்கநிலை நிறுவனமான HMD Global, புதிய சாதனங்களை விற்பனை செய்ய பழைய நினைவுகளின் ஆற்றலை விரிவாகப் பயன்படுத்துகிறது. இந்த தந்திரத்தை பயன்படுத்தி தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ள மாடல் Nokia 5310. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த Nokia 5310 XpressMusic மாடல் கைபேசியை மறு வடிவமைப்பு செய்து அதை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

இந்த புதிய Nokia 5310 மாடல் கைபேசி ரூபாய் 3,399/- க்கு விற்பனைக்கு வந்துள்ளது, இது மற்ற நோக்கியா (Nokia) அடிப்படை மாடல் கைபேசிகளின் விலையை விட சற்று அதிகம் தான்.

புதிய Nokia 5310 கைபேசியின் 2020 பதிப்பு பழைய மாடல் நோக்கியா கைபேசியால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது, எனினும் அதை அப்படியே நகல் எடுத்ததை போல இல்லை. புதிய மாடல், ஒரு நிலையான candy-bar வடிவத்தில் உள்ளது. பழைய கைபேசியை போலவே புதிய மாடலும் பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்டிருந்தாலும் பழைய மாடல் கைபேசி இதை விட நன்றாக இருந்தது.

 

Nokia Tamil News Nokia new model mobile phone Nokia 5310 price features- நோக்கியா பட்ஜெட் போன்கள்
Nokia 5310 price, features

முன்பக்கத்தில் 2.4-inch 240×320p colour screen மற்றும் standard 12-button dial pad உள்ளது. சார்ஜ் செய்வதற்கு micro USB port உடன் 3.5mm headphone jack, 16MB built-in சேமிப்பு வசதி, 32GB கூடுதல் சேமிப்பு வசதிக்காக microSD slot மற்றும் கழற்றக் கூடிய பேட்டரி வசதியும் உள்ளது. அதிகப்படியான பாடல்களை சேமித்து வைக்க விரும்பினால் SD card தேவைப்படும்.

 

Nokia Tamil News Nokia new model mobile phone Nokia 5310 price, features- நோக்கியா பட்ஜெட் போன்கள்
Nokia new model mobile phone

Hi-Fi தரத்தில் ஆடியோவை வழங்குவதற்கு பழைய மாடல் நோக்கியா கைபேசியில் இருந்த audio chip (DAC-33) வசதி புதிய மாடலில் இல்லை. இருந்த போதிலும் இதன் ஆடியோ தரம் ஈர்க்கும் விதத்தில் உள்ளது. பாடல் கேட்பதற்கு வெளியே உள்ள music keys காரணமாக music player பயன்படுத்துவதற்கும் FM ல் பாடல் கேட்பதற்கும் வசதியாக உள்ளது.

 

நோக்கியா Series 30+ மென்பொருளில் இயங்கும் இந்த புதிய மாடல் கைபேசியில் Mediatek 6260A chip with 8MB of RAM உள்ளது. இது ஒரு 2G கைபேசி மேலும் இதில் 4G LTE அல்லது Wi-Fi அனுகுவதற்கான வசதி இல்லை.

Nokia 5310 மாடல் கைபேசியை எதற்காக வாங்க வேண்டும் ?

சமூக ஊடகங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு இது ஏற்ற மாடல் கைபேசி. வெறுமனே அழைப்புகள் செய்வதற்கும் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் சிறந்த மாடல். இதன் பேட்டரி ஆயுள் 4 முதல் 5 நாட்கள் வரை வருகிறது எனவே பயணங்களின் போது இந்த கைபேசி மிகவும் உதவிகரமாக இருக்கும். நிறுவனத்தின் கணிப்பு படி கைபேசி standby ல் இருந்தால் பேட்டரி ஒரு வாரம் வரை வரும் எனக் கூறுகிறது.
ரூபாய் 1,199/- க்கு கிடைக்கக்கூடிய Nokia 105 மாடல் கைபேசியில் இந்த Nokia 5310 கைபேசியில் கிடைக்கும் வெளிப்புற ஆடியோ கட்டுப்பாடு மற்றும் dual frontal speakers தவிர அனைத்து வசதிகளும் உள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nokia tamil news nokia new model mobile phone nokia 5310 price features

Next Story
என்னமா டெவலப் பண்றாங்கய்யா… வாட்ஸ் ஆப் புதிய ஆனந்த அனுபவத்திற்கு ரெடி ஆகிட்டீங்களா?WhatsApp, whatsapp features, new features in whatsapp, whatsapp stickers, animated stickers on whatsapp, whatsapp news, whatsapp updates, whatsapp beta version, WhatsApp news, WhatsApp news in tamil, WhatsApp latest news, WhatsApp latest news in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express