Advertisment

Nokia X5 (Nokia 5.1 Plus) launch in China: நோக்கியாவின் புதுவரவான நோக்கியா X5 இன்று சீனாவில் அறிமுகம்

Nokia X5 (Nokia 5.1 Plus) launch in China: இந்தியா மற்றும் இதர நாடுகளில் எப்போது அறிமுகமாகும் நோக்கியா X5?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nokia, HMD Global, Smartphones, HMD Global event india, nokia event india,

Nokia X5 (Nokia 5.1 Plus) Camera, Specification, Price, launch date in China

Nokia X5 (Nokia 5.1 Plus) launch in China: நோக்கியா X5 எனப்படும் நோக்கியா 5.1 ஒன்றினை சீனாவில் இன்று (ஜூலை 18) வெளியிட இருக்கிறது HMD க்ளோபல் நிறுவனம். ஜூலை 11ம் தேதியே வர இருப்பதாக தகவல் தெரிவித்த நிறுவனம், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வெளியீட்டு நிகழ்வினை 18ம் தேதிக்கு மாற்றியுள்ளது.

Advertisment

சீனாவின் வெய்போ இணையதளத்தில் நோக்கியா 5.1 வெளியிடப்படும் தேதியினை முறையாக அறிவித்திருக்கிறது HMD க்ளோபல்.

கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக இணைய தளங்களில் பேசப்பட்டு வரும் இந்த போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

நோட்ச் திரையுடன் வெளியிடப்படும் முதல் நோக்கியா போன் இதுவாகும். 5.86 இன்ச் HD திரையுடன் இருக்கும் இந்த போனின் ஸ்கிரீன் பார்மட் 19:9 ஆகும்.

3 அல்லது 4 அல்லது 6 ஜிபி RAMவுடன் வரும் இந்த போனை இயக்குகிறது மீடியாடெக் ஹெலியோ P60 ப்ரோசெஸ்ஸர் . 32ஜிபி அல்லது 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜுடன் வருகிறது இந்த போன்.

கேமரா

13MP மற்றும் 5MP என இரண்டு பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது இந்த போன். 8MP முன்பக்க கேமராவுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும் என தகவல் தரப்பட்டுள்ளது.

விலை

3000mAh பேட்டரி பேக்-அப்புடன் வரும் 32GB வேரியண்ட் போனின் விலை 799 யுவான் (ரூ. 8,200) மற்றும் 64 GB வேரியண்ட் போனின் விலை 999 யுவான் (ரூ. 10, 300) ஆகும். சீனாவில் வெளியாகும் இந்த போன், எப்போது இந்தியா மற்றும் இதர நாடுகளில் வெளியிடப்படும் என்று தகவலை இன்னும் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

Read this article in English

Nokia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment