நத்திங் ஃபோன் (2a) ஸ்மார்ட் போன் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மார்ச் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் அதன் முந்தைய வெர்ஷனான நத்திங் போன் 1-ஐ விட விலை குறைவாக இருக்கும் என்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, நத்திங் இந்திய சந்தையில் கவனம் செலுத்தும் விதமாக, பெய் தனது பெயரை X-ல் (முன்னர் ட்விட்டர்) "கார்ல் பாய்" என்று மாற்றியுள்ளார். வரவிருக்கும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனும் 'மேட் இன் இந்தியா'வாக இருக்கும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஃபோன் (2a) விலை, சிறப்பம்சங்கள்
Tipster Yogesh Brar-ன் பதிவுபடி, நத்திங் ஃபோன் (2a) MediaTek Dimensity 7200 Ultra chipset மூலம் இயக்கப்படும். இது முன்பு Redmi Note 13 Pro+-ல் காணப்பட்டது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை 8ஜிபி ரேம்/128ஜிபி வெரியண்ட் €349 (ரூ.30,000) இருக்கும் என்றும் 12ஜிபி ரேம்/256ஜிபி ஸ்டோரேஜ் வெரியண்ட் விலை €399 (ரூ.35,000) இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமாக, நத்திங் ஃபோன் (2a) ரூ.30,000 விலையாக இருந்தால் இது சமீபத்திய ஸ்மார்ட்போன் Redmi Note Pro+ மற்றும் Realme 12 Pro+ போன்றவற்றுடன் நேரடிப் போட்டியாக இருக்கலாம்.
மேலும் ஃபோன் (2a) 6.7-இன்ச் முழு HD+ OLED டிஸ்ப்ளேவுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வர வாய்ப்புள்ளது. ஸ்மார்ட் போன் 50எம்பி ப்ரைமரி சென்சார் மற்றும் 50எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் டூயல் கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பு ஏற்ப 32எம்.பி முன்பக்க கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் சொந்த நத்திங் ஓஎஸ் 2.5 இல் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும், மேலும் 45W வரை பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“