நத்தின் நிறுவனம் தனது 3-வது ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நத்தின் போன் 2a (Nothing Phone 2a ) ரூ.23,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் கருப்பு, வெள்ளை என 2 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நத்தின் போன் 2a சிறப்பம்சங்கள்
நத்தின் போன் 2a ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7200 Pro சிப்செட் மூலம் 12 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. கூடுதலாக, 8 ஜிபி ரேம் பூஸ்டர் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 3 வெரியண்ட்களில் வருகிறது. இரண்டு மாடல்கள் 8 ஜிபி ரேம் உடன் வருகின்றன, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகின்றன.
போன் 2a டூயல் கேமரா போன் ஆகும். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவு கொண்ட 50-மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 114 டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ அம்சம் கொண்டுள்ளது. முன்பக்கம் செல்ஃபி கேமரா 32 மெகாபிக்சல் கொண்டது.
ஃபோன் 2a ஆனது 6.7-இன்ச் AMOLED டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 1300 நிட்கள் வரை உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“