அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, பிப்ரவரி 14 காதலர் தினத்தில் அறிவியல் கருவிகள் மற்றும் பேலோடுகளை சுமந்து கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் Intuitive Machines நோவா-சி லேண்டரை நிலவிக்கு அனுப்புகிறது,
புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளித் தளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் நாளை நிலவுக்கு அனுப்படுகிறது.
இந்த திட்டத்தில் நாசா நோவா-சி லேண்டரை இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி வரலாறு படைத்த இடத்திற்கு மிக அருகில் தரையிறங்குவதை இலக்காக கொண்டுள்ளது. அதாவது நிலவின் தென் துருவத்தில் இந்த லேண்டரை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.எம்-1 என அழைக்கப்படும் இந்த திட்டத்தில், விண்கலம் பேலோடுகள், அறிவியல் கருவிகளை சுமந்து கொண்டு ஆய்வு செய்கிறது. சந்திரனின் துருவ வளங்களை ஆராய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒரு மூலோபாய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது, இங்கு நீர் பனிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும் இந்த லேண்டர் அனுப்பபடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“