Nubia Red Magic 3S specifications, price, launch, availability, sales : கேமிங் பிரியர்களுக்காகவே ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருகிறது நுபியா என்ற ஸ்மார்ட்போன் நிறுவனம். இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் ரெட் மேஜிக் 3 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது அந்நிறுவனம். அதன் அப்கிரேடட் வெர்ஷனாக தற்போது வெளியாக உள்ளது ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன்.
Advertisment
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ரெட்மேஜிக் நிறுவனம். ரெட்மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் ஸ்நாப்ட்ராகன் 855+ ப்ரோசசர், எச்.டி.ஆர். ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி. திரை, 8கே வீடியோ போன்ற சிறப்பம்சங்களை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
வேரியண்ட் மற்றும் விலை
Advertisment
Advertisements
இந்தியா வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் 2 வேரியண்ட்டுகளை கொண்டுள்ளது. 8GB RAM + 128GB-ன் விலை 2,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30000) ஆகும். 12GB RAM + 256GB-ன் விலை 3,799 யுவான் ஆகும். உலக அளவில் அனைத்து மார்க்கெட்டிலும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதன் ஆரம்ப விலை 479 டாலர்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Nubia Red Magic 3S specifications
6.65 இன்ச் ஃபுல் எச்டி + எச்.டி.ஆர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை கொண்டுள்ளது. இதன் ரெசலியூசன் 1080×2340 பிக்சல்களாகும். குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855+ ப்ரோசசரை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். ப்ரைட்நெஸ் 430 நிட்ஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆகும்.
கேமராவை பொறுத்தமட்டில் 48 எம்.பி. சோனி சென்சாரை பெற்றுள்ளது. 15 ஃபிரேம்ஸ் பெர் செகண்ட் என்ற வீதத்தில் 8கே வீடியோக்களை இந்த ஸ்மார்ட்போனினால் ரெக்கார்ட் செய்ய இயலும். எக்ளிப்ஸ் ப்ளாக், மெச்சா சில்வர் மற்றும் சைபர் ஷேட் கலர் ஆப்சன்களில் கிடைக்கிறது.