Nubia Red Magic gaming phone இந்தியாவில் அறிமுகம்
ஆசூஸ் நிறுவனத்தை தொடர்ந்து நூபியாவும் தங்களின் கேமிங் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளனர். உங்களுக்கு மொபைல் கேமிங்கில் அதிகம் விருப்பம் இருந்தால், இந்த போன் நிச்சயம் உங்களை கவரும். நூபியா ரெட் மேஜிக் 8 ஜிபி RAM மற்றும் ஸ்நாப்ட்ராகன் 835 ப்ரோசசருடன் வெளியாகும் இந்த போன் இந்தியாவில் வருகின்ற 20ம் தேதி அறிமுகமாகிறது.
நுபியா ரெட் மேஜிக் போன் தற்போது வரை சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வேரியண்டுகளில் அந்த போன்கள் அங்கு வெளியாகியுள்ளன.
6GB RAM/64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM/128GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போன்கள் முறையே 2,499 Yuan (ரூபாய் 25,662/-) மற்றும் 2,999 Yuan (ரூபாய் 30,796) ஆகும்.
இந்தியாவில் இந்த போனின் விலை ரூ.25,000த்தில் இருந்து ரூ.30,000க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நூபியாவின் இரண்டாவது கேமிங் போனான நூபியா மேஜிக் மார்ஸ் வெளியானது. சீனாவில் மட்டுமே அந்த போன் தற்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : உலகின் முதல் கேமிங் போனை வெளியிட்ட ஆசூஸ்
Nubia Red Magic gaming phone சிறப்பம்சங்கள்
5.99 இன்ச் அளவுள்ள எச்.டி + LTPS TFT டிஸ்பிளேயுடன் வெளியாகிறது.
இந்த போனின் ரெசலியூசன் 2160×1080 பிக்சல்களாகும்
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 835 ப்ரோச்சர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆட்ரெனோ 540 கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட் கொண்டு இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது.
கூகுளின் ஆண்ட்ராய் 8.1 ஓரியோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
நியோபவர் 3.0 என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த போனை மிக வேகமாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.
3,800 mAh நான் - ரிமூவபிள் பேட்டரி இதில் பொறுத்தப்பட்டுள்ளது.
Nubia Red Magic gaming phone கேமரா
24 எம்.பி பிரைமரி கேமரா ( f/1.7 aperture)
8 எம்.பி செல்பி கேமரா (f/2.0 aperture)