/indian-express-tamil/media/media_files/2025/10/18/redmagic-11-pro-2025-10-18-18-23-26.jpg)
கேமிங் உலகின் புதிய அசுரன்: 24GB ரேம், 120W சார்ஜிங்.. நுபியா ரெட்மேஜிக் 11 சீரிஸ் அறிமுகம்!
கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு பெயர்போன நுபியா (nubia) நிறுவனம், தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடல்களான ரெட்மேஜி 11 Pro மற்றும் 11 Pro+ ஆகியவற்றைச் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த 2 போன்களும் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 SoC சிப்செட் மூலம் இயங்குவதுடன், கேமிங்கிற்காகப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.
சிறப்பம்சங்கள்
இந்த 2 போன்களும் ஒரே மாதிரியான வடிவமைப்பு, கேமரா மற்றும் திரையைக் கொண்டுள்ளன. இதில் 6.85-அங்குல BOE X10 AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 1.5K ரெசல்யூஷன் மற்றும் அதிவேக 144Hz புதுப்பிப்பு வீதத்தை (Refresh Rate) வழங்குகிறது. டிஸ்ப்ளேவின் கீழ் மறைந்திருக்கும் முன்பக்கக் கேமரா (Under-display front camera), 3D அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இதில் 95.3% திரை-உடல் விகிதம் மற்றும் 1.25 மிமீ மெலிதான பெசல்கள் உள்ளன.
இரண்டுமே ஸ்னாப்டிராகன் 8 Elite Gen 5 SoC சிப்செட் உடன், நுபியாவின் சொந்த R4 கேமிங் சிப் மூலம் இயக்கப்படுகின்றன. இவை 24GB வரை LPDDR5T RAM மற்றும் 1TB UFS 4.1 Pro சேமிப்பகத்துடன் கிடைக்கின்றன. வெப்பத்தைக் கட்டுப்படுத்த, இரண்டிலும் உள்ளமைக்கப்பட்ட செயலில் குளிர்விக்கும் விசிறி (Active Cooling Fan) மற்றும் திரவ உலோகம் கொண்ட VC அறை (Liquid Metal VC Chamber) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில் 50MP முதன்மை கேமராவுடன் மற்றொரு 50MP அல்ட்ரா-வைட் சென்சார் உள்ளது. செல்ஃபிக்காக 16MP அண்டர்-டிஸ்ப்ளே கேமரா முன்புறத்தில் உள்ளது. 3,000Hz டச் சாம்பிளிங் வீதம் மற்றும் 520Hz டூயல் டச் ஷோல்டர் பட்டன்கள் ஆகியவை உள்ளன. 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், வைஃபை 7 ஆதரவு, என்.எஃப்.சி, அகச்சிவப்பு பிளாஸ்டர் (Infrared Blaster), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் ஐ.பி-X8 நீர் எதிர்ப்புத் திறன் ஆகியவை உள்ளன. இவை ரெட்மேஜிக் ஓ.எஸ். 11 மூலம் இயங்குகின்றன.
ரெட்மேஜிக் 11 ப்ரோ மற்றும் 11 ப்ரோ + வேறுபாடுகள்
அம்சம் | RedMagic 11 Pro | RedMagic 11 Pro+ |
பேட்டரி | 8,000mAh | 7,500mAh |
சார்ஜிங் | 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டும் | 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் + 80W வயர்லெஸ் சார்ஜிங் |
கூடுதல் கூலிங் | இல்லை | பல்சேட்டிங் நீர் குளிரூட்டும் எஞ்சின் (Pulsating Water Cooling Engine) |
நிறங்கள் | டார்க் நைட், சில்வர் விங்ட் வார் காட் | டார்க் நைட், ட்ரான்ஸ்பரண்ட் சில்வர் விங், ட்ரான்ஸ்பரண்ட் டார்க் நைட் |
குறிப்பாக, ட்ரான்ஸ்பரண்ட் (வெளிப்படையான) வண்ண மாடல்களில் LED லைட்டிங் அம்சமும் உள்ளது. இந்த போன்கள் 8.9 மிமீ தடிமன் மற்றும் 230 கிராம் எடையுடன் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.