இந்தியாவில் அக்டோபர் 29-ம் தேதி அரிய பகுதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இனி அடுத்து
2025-ம் ஆண்டில் நான் இந்தியாவில் நிகழும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து காண முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 28-29) இடைப்பட்ட இரவில் நிகழும் இந்த பகுதிசந்திர கிரகணம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காண முடியும். சனிக்கிழமை நள்ளிரவில் நிலவு பெனும்பிராவில் நுழையும் என்றாலும், அம்ப்ரல் பேஃஸ் (umbral phase) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகுதி சந்திர கிரணம் பற்றி 5 முக்கிய தகவல்கள்
1. கிரகணம் சுமார் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும். இந்த கிரகணத்தின் அம்ப்ரல் கட்டம் சனிக்கிழமை அதிகாலை மணிக்கு தொடங்கி 2.24 மணிக்கு முடிவடையும்.
2. பகுதி கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும். மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்திலும் இது தெரியும்.
3. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போதும், மூன்று பொருட்களும் நேர்கோட்டில் வரும் போது முழு நிலவு நாளில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
முழு சந்திர கிரகணம் பூமியின் குடை நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது, அதே நேரத்தில் சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும்போது மட்டுமே பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
பகுதி கிரகணங்களின் போது, பூமியின் நிழல் பொதுவாக சந்திரனின் பக்கத்தில் மிகவும் இருட்டாகத் தோன்றும். ஆனால் பூமியிலிருந்து மக்கள் பார்ப்பது சூரியன், பூமி மற்றும் சந்திரன் எவ்வாறு சீரமைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது.
அடுத்த சந்திர கிரகணம் எப்போது?
முழு சந்திர கிரகணமாக இருக்கும் அடுத்த சந்திர கிரகணம் செப்டம்பர் 7, 2025 அன்று இந்தியாவில் தெரியும்.
இந்தியாவில் கடைசி சந்திர கிரகணம் எப்போது தோன்றியது?
இந்தியாவில் முன்பு நவம்பர் 8, 2022 அன்று தோன்றியது. அது முழு சந்திர கிரகணமாக இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“