அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் அதிசயம்… தயாரா இருந்துக்கோங்க மக்களே!

இனி வருகின்ற 2050ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்நிகழ்வு நடைபெறும்.

By: October 28, 2020, 4:01:47 PM

October night-sky all set to witness Blue Moon on 31st :  ஒரு மாதத்தில் இரண்டாம் முறை தோன்றும் பௌர்ணமி நிலவிற்கு ஆங்கிலத்தில் ப்ளூமூன் என்று பெயர். வருகின்ற 31ம் தேதி நடக்க உள்ளது இந்த வானிலை அதிசயம். சரியாக 08:19 மணியில் இருந்து பார்க்க இயலும். இந்த மாதத்தின் முதல் பௌர்ணமி சரியாக அக்டோபர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் ஏற்பட்டது. 30 மாதங்களுக்கு ஒரு முறை இந்த இரண்டாம் பௌர்ணமி நிகழும். பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமி தோன்றாத போது தான் இந்நிகழ்வு நடைபெறுகிறது.

பொதுவாக ஒரு லூனார் மாதம் என்பது 29 நாட்கள் 12 மணி நேரம் 44 நிமிடங்கள் 33 நொடிகளாகும். இது மாதத்தின் முதல் அல்லது இரண்டு தேதிகளில் தோன்றலாம். பிப்ரவரி மாதத்தில் மொத்தமே 28 நாட்கள் மட்டுமே இருக்கின்ற காரணத்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

சில சமயங்கள் 30 தேதிகளை கொண்ட மாதங்களில் இவ்வாறு இரட்டை பௌர்ணமிகள் தோன்றும். 2007ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இது நிகழ்ந்தது. இனி வருகின்ற 2050ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்நிகழ்வு நடைபெறும். பொதுவாக ஆண்டுக்கு 12 பௌர்ணமிகளே தோன்றும் நிலையில், எப்போதெல்லாம் ப்ளூமூன் நிகழ்வு ஏற்படுகிறதோ, அந்த ஆண்டில் மொத்தமாக 13 பௌர்ணமிகள் தோன்றும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:October night sky all set to witness blue moon on 31st

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X