ஊழியர்களுக்கு கூல்டிரிங்ஸ், சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுள் அசத்தல் முயற்சி!

Alphabet Inc இன் கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் பரிமாற ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது.

Alphabet Inc இன் கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் பரிமாற ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
ஊழியர்களுக்கு கூல்டிரிங்ஸ், சிப்ஸ் தரும் ரோபோட்... கூகுள் அசத்தல் முயற்சி!

கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தின் ஜாம்பவான் என்றே கூறலாம். புது புது தொழில்நுட்பத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் கூகுள் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோட் ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் போன்ற உணவுகளை பிரேக்ரூமிலிருந்து எடுத்து கொடுத்து உதவுகிறது. ஊழியர்கள் தங்கள் ஓய்வுநேரத்தில் கேட்கும் உணவுகளை எடுத்து கொடுத்து உதவுகிறது.

Advertisment

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் உள்ள இந்த ரோபோட் உரையாடல் திறன் உடையது. கண்கள் மற்றும் கைகளை கொண்டு இந்த ரோபோட்கள் மெக்கானிக்கல் வெயிட்டர்கள் போல செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோட்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

publive-image

அதேநேரத்தில் இந்த ரோபோட்கள், கூகுள் ரோபோக்கள் விற்பனைக்கு இல்லை என்றும். விற்பனைக்கு தயாராக இல்லை என்றும் கூறியுள்ளது. இந்த ரோபோட்கள் சில எளிய செயல்களை மட்டுமே செய்து வருகின்றன. மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆகியவை ரோபோட்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

கூகுள் ரோபாட்டிக்ஸ் ஆராய்ச்சியின் மூத்த இயக்குனர் வின்சென்ட் வான்ஹூக் கூறுகையில், " ரோபோட்கள் நம் கட்டளைகளை ஏற்று நடக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய இன்புட் திறமைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

விக்கிப்பீடியா, சமூக ஊடகங்கள் மற்றும் பிற வலைதளங்களிலிருந்து உலகத்தை பற்றிய அறிவு மற்றும் புரிதலை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இதுபோன்ற ரோபோட்கள் பயன்படுத்தப்படவில்லை" என்று தெரிவித்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: