கூகுள் மேப்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் ஆகியவற்றை முற்றிலுமாக கைவிட்டு ஓலா ஒரு பெரிய முடிவை அறிவித்தது. இதற்கு பதிலாக ஓலா இன்-ஹவுஸ் டெக் தீர்வுகளை வழங்குகிறது, அதாவது அவர்களே சொந்தமாக உருவாக்கப்பட்ட ஓலா மேப்ஸ் அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை, ஓலா இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால் கூறுகையில், நாங்கள் இதற்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை செலவழித்தோம், ஆனால் நாங்கள் இப்போது இன்-ஹவுஸ் டெக் தீர்வுகளை வழங்க உள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் அஸூரிலிருந்து நிறுவனம் இன்-ஹவுஸ் கிளவுட் உள்கட்டமைப்பிற்கு மாறிய சில மாதங்களுக்குப் பிறகு, சுற்றுச்சூழல் அமைப்பை இயக்குவதற்கும், நிறுவனத்தின் பெரிய மொழி மாதிரி (எல்எல்எம்) க்ருட்ரிமை இயக்குவதற்கும் இது அறிமுகம் ஆகிறது.
அகர்வால் கூறுகையில், வரும் நாட்களில் ஓலா மேப்ஸில் பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்படும். street view, நியூரல் ரேடியன்ஸ் ஃபீல்டுகள் (NERFs), உட்புறப் படங்கள், 3D வரைபடங்கள், ட்ரோன் வரைபடங்கள் மற்றும் பல அம்சங்கள் இடம் பெறும் என்றார்.
கூகுள் மேப்ஸ் ஆப்-ஐ வாடிக்கையாளர்கள் பயன்படுத்த இலவசம் என்றாலும், கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸை (ஏபிஐ) இணைக்கும் ஓலா போன்ற வணிகங்கள் இதைப் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது அதிக அளவில் இதற்கு தொகை செலுத்த வேண்டும். இந்நிலையல் ஓலா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“