Advertisment

ஸ்விகி, சோமொட்டோ-ஐ விட கம்மி விலையில் உணவு; இனி இதில் ஆர்டர் பண்ணுங்க

ஸ்விகி, சோமொட்டை விட கம்மி விலையில் உணவு வழங்கும் ஓ.என்.டி.சி (ONDC) தொழில்நுட்பம் பெங்களூரு சந்தைகளில் நுழைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
ONDC is the new player in the food delivery game Can it take on Zomato and Swiggy

டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் என்னும் ஓ.என்.டி.சி. சேவை உணவு டெலிவரி உள்ளிட்ட இ-வர்த்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுக்க ஸ்விகி மற்றும் சோமொட்டோ ஆகிய நிறுவனங்கள் உணவு டெலிவரி சந்தையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. எனினும் இவை, இடைத் தரகர் கமிஷன், விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளால் விமர்சிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் பெங்களூருவில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க் என்னும் ஓ.என்.டி.சி. சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இது வணிகத்திற்கும் நுகர்வோருக்கும் இடையிலான இடைத்தரகர்களை குறைக்கிறது. இந்தச் சேவையானது பெங்களூரு போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டும் தற்போது உள்ளது.
மேலும் ONDC ஆனது வணிகங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே நேரத்தில் பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, ஓ.என்.டி.சி. ஓர் செயலி (ஆஃப்) கிடையாது.

நாங்கள் Zomato அல்லது Swiggy வழியாக உணவை ஆர்டர் செய்யும் போது அல்லது Amazon அல்லது Paytm வழியாக மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, இந்த தளங்களில் அவற்றின் சொந்த டெலிவரி நிர்வாகிகள் இருப்பார்கள்.
ஆனால், NDC இலிருந்து ஒரு தயாரிப்பை ஆர்டர் செய்யும் போது, உணவகம் அதன் சொந்த பணியாளரை அனுப்ப வேண்டும். இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஒரே உணவகம் ஒரே நேரத்தில் பல ஆர்டர்களைப் பெற்றால், அவை அனைத்தையும் வழங்க முடியாமல் போகலாம். இதேபோல், Zomato அல்லது Swiggy போலன்றி, ONDC ஆனது டெலிவரிக்கான மதிப்பிடப்பட்ட நேரம் போன்ற விவரங்களை வழங்காது.
சமூக ஊடக தளங்களில் உள்ள கருத்துகளின்படி, உணவு விநியோகத்தைப் பொறுத்தவரை ONDC ஆனது Swiggy மற்றும் Zomato ஐ விட மலிவானதாகத் தெரிகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zomato Swiggy Amazon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment