ஒன்பிளஸ் முன்னணி ஸ்மார்ட் போன் நிறுவனமாகும். ரூ.30,000 தொடங்கி மிட்- ரேஞ் வகையிலான போன்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் ஒன்பிளஸ்ஸின் அடுத்த சீரிஸ் போன் ஒன்பிளஸ் 12 ஆக இருக்கும் என அறியப்படுகிறது. இது ஒரு ஃபிளாக்ஷிப் வகை ஸ்மார்ட் போனாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
GSMArena-ன் சமீபத்திய அறிக்கைபடி, 'ஒன்பிளஸ் 12 ' எனக் குறிப்பிடப்படும் ஸ்மார்ட் போன் ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட்டைக் கொண்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. 50MP அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 64MP பெரிஸ்கோப் லென்ஸால் ஆதரிக்கப்படும் 50MP முதன்மை கேமராவுடன் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.
IMX9 தொடர் சென்சார் கொண்ட பிரதான கேமராவுடன் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பாக இருக்கும். இது Xiaomi 12S Ultra மற்றும் Oppo Find X6 போன்ற போன்களில் காணப்படும் 1-இன்ச் IMX989 சென்சார் போன்றது. ப்ரைமரி சென்சார் 50MP அல்ட்ராவைட் லென்ஸ் மற்றும் Omnivision மூலம் புதிய 64MP OV64B பெரிஸ்கோப் லென்ஸால் ஆதரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் Weibo கூற்றுப்படி, ஒன்பிளஸ் 12 ஃபிளாக்ஷிப் போன் இந்தாண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். 2K டிஸ்ப்ளே கொண்டிருக்கும் போன் 5,000mAh பேட்டரி அமைப்புடன் அறிமுகமாக வாய்ப்புள்ளது. அதோடு 150W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“