கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5T ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மிட்நைட் பிளாக் எனும் ஒரேயொரு நிறத்தில் மட்டும் இந்த மொபைல் கிடைத்தது. சிலர் கருப்பு நிறத்தை விரும்பாததால், ஸ்டார் வார்ஸ் லிமிட்டெட் எடிஷன் மற்றும் லாவா ரெட் என இரண்டு கூடுதல் நிறங்களில் இதே மொபைல்கள் வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்ட லாவா ரெட் நிற ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் விற்பனை தற்போது இந்தியாவிலும் துவங்கியுள்ளது. அமேசான் வலைத்தளத்தில் மட்டும் கிடைக்கும் ஒன்பிளஸ் 5T 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.37,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
6.01 இன்ச் 2106x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ ஆப்டிக் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 64-பிட் 10nm பிராசஸர், அட்ரினோ 540 GPU, 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபிஇன்டெர்னல் மெமரி, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் சார்ந்த ஆக்சிஜன்ஓ.எஸ். 4.7, ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட், டூயல் சிம் ஸ்லாட், 16 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், சோனி IMX398, f/1.7 அப்ரேச்சர், 1.12μm பிக்சல், 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர், சோனி IMX376K, 1.0μm பிக்சல், 16 எ்மபி செல்ஃபி கேமரா, சோனி IMX371 சென்சார், 1.0μm பிக்சல், f/2.0 அப்ரேச்சர், கைரேகை ஸ்கேனர், 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3300 எம்ஏஎச் பேட்டரி, டேஷ் சார்ஜ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை இந்த மொபைல் கொண்டுள்ளது.