ஒன் பிளஸ் 5 விற்பனையில் இருந்து நிறுத்தப்பட உள்ளது என அந்த நிறுவனத்தின் இந்திய பொது மேலாளர் விகாஸ் அகர்வால், இந்தியன் எக்ஸ்பிரசுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அமேசான் தளத்தில் நாளை முதல் ஒன் பிளஸ் 5டி விற்பனை துவங்குகிறது. சாம்சங், ஆப்பிள் போன்களை போலவே ஒன் பிளஸ் ஒரு பிரபலமான ஸ்மார்ட்போனாக வளர்ந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஒன் பிளஸின் அடுத்த நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள நாங்கள் ஒன் பிளஸ் பொது மேலாளர் விகாஸ் அகர்வாலிடம் பேசினோம்.
அண்மையில் தான் ஒன் பிளஸ் 5 வெளியானது அதற்குள் ஒன் பிளஸ் 5டி வெளிவர காரணம் என்ன?
எங்களின் முந்தைய தயாரிப்புகளை நீங்கள் கவனித்தால், ஒன் பிளஸ் 3டி வைப்பு தீபாவளியோடு விற்று முடிந்தது. அதோடு ஒன் பிளஸ் 3டி விற்பனை மற்றும் தயாரிப்பு முடிந்தது. அதே போல் தான் ஒன் பிளஸ் 5வும். இன்னும் சில தினங்களில் ஒன் பிளஸ் 5 இருப்பு முடிந்து விடும். ஒரு பிராண்டாக ஒரு நேரத்தில் ஒரு மாடல் விற்பனையில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஒன் பிளஸ் 5 முடிந்த உடன் ஒன் பிளஸ் 5டி மட்டுமே சந்தையில் இருக்கும். ஒன் பிளஸ் 5டியில் பெரிய மாற்றங்கள் எதுவும் எதிர் பார்க்க முடியாது. ஒரு வருடத்திற்கு ஒரு புதிய ஜெனரேசண் கைபெசிகளையே வெளியிடுவோம்.
ஒன் பிளஸ் 5டி பொருத்தவரை பெரிய டிஸ்ப்ளே மற்றும் ஒட்டுமொத்த அனுபவம் மற்றும் சில குறிப்புகள் அடிப்படையில் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக வெளியிட்டுள்ளோம்.
நிச்சயம், சில ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ஆனால் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது. ஆறு மாதம் முன்பு ஒன் பிளஸ் 5 வெளிவந்த பொது, அதுவே சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போனாக இருந்தது. எனவே ஒரு நிறுவனமாய் நாங்கள் அதையே பார்க்கிறோம், சந்தையில் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன்களோடு நாங்கள் போட்டியிட புது மாடல்களை நிச்சயம் வெளியிட வேண்டும். தற்போது உள்ள தயாரிப்பின் அடுத்த வடிவமே இது. அதனால் விலையில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இந்திய சந்தையில் ஒன் பிளஸ் இன் நிலை என்ன?
கவுன்ட்டர்பாயிண்ட் மற்றும் IDCயின் அறிக்கை படி, முதல் இடத்தில் இருக்கும் பிராண்டுகளில் ஒன் பிளஸ் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. இதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் அடங்கும். இந்த மூன்று பிராண்டுகளும் 98 சதவீத சந்தையை ஆக்கிரமித்துள்ளது. மூன்று வருட நிறுவனமாக இருந்துக்கொண்டு முதல் மூன்று இடைத்தை பிடித்தது ஒரு பெரிய சாதனை தான். கடந்த காலாண்டில் ஒன் பிளஸ் 5 விற்பனையில் முன்னனி வகுத்து 25 சதவீத பங்கு பெற்றது.
இந்திய சந்தையில் ஒன் பிளஸ் ஆப்லைன் விற்பனைக்கு வருமா?
தற்பொழுது நாங்கள் ஆன்லைன் விற்பனையில் அதிக கவனம் செலுத்துகிறோம். எங்களது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சேவையில் இணைந்துள்ளனர். ஆப்லைன் விற்பனையில் வாடிக்கையாளர்கள் போனை பார்த்து வாங்கலாம், அதனால் க்ரோமா உடன் கைகொர்த்துள்ளோம். க்ரோமா ஷோரூமில் மக்கள் போனை பார்த்து அனுபவித்து அதன் பின் வாங்கலாம். மேலும் எங்களது ஷோரூம் டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ளது.
இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவின் எதிர்காலத்தை பற்றி...
இந்தியாவில் இந்த சந்தை வியாபாரம் ஒரே கோட்டில் உள்ளது, இதில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. குறைந்த விலையில் உயர்தர ஸ்மார்ட்போன் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். எனவே அந்த நிலை அப்படியே நிலைக்கிறது. ஒரு ஸ்மார்ட்போனிற்கு ரூ. 60,000-ரூ.70,000 வழங்கும் மக்கள் மிக குறைவாகவே இருக்கின்றனர்.
தற்போது ரூ 10,000 ரூ. 15,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் ரூ.20,000 - ரூ.35,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை எதிர்க்காலத்தில் வாங்குவார்கள். இதே சூழல் தான் சில வருடத்திற்கு முன்பு சீனாவில் நிலவியது. அதை இப்பொழுது நாங்கள் இந்தியாவிலும் பார்க்கிறோம். இன்னும் சில காலத்தில் இந்தியாவில் அந்த வளர்ச்சி ஏற்படும்.
தற்போதிய சந்தையில் நாங்கள் 33 சதவீத பங்கு வகுக்கிறோம். உலகளாவிய சந்தையோடு ஒப்பிடும்போது இது சற்று குறைவு தான். இருப்பினும் எங்கள் பங்கை உயர்த்துவதற்காக குறைந்த விலை கைபேசிகளை நாங்கள் விற்கபோவதில்லை. ப்ரீமியம் சந்தையில் மட்டுமே எங்கள் கவனம் இருக்கும். IDC அறிக்கையின் படி 5- 6 மில்லியன் கருவிகள் ஒரு வருடத்தில் விற்கப்படுகின்றனர்.
இந்தியாவில் ஒரு சீன பிராண்டாக இருப்பதைப் பற்றிய கருத்து...
சீன தயாரிப்புகளை பற்றி இந்திய மக்கள் கருதுவது தரம் இல்லாத பொருட்கள் என்பது தான். இது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது, இதற்கு எதிர்மாறாக உலகளாவிய பிராண்டுகள், நல்ல தரம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
நிச்சயம் சில சீன தயாரிப்புகளில் ஒரு சில குறைபாடு இருந்துள்ளது. ஆனால் ஒன் பிளஸ் பொறுத்தவரை நாங்கள் எங்களை ஒரு உலகளாவிய பிராண்டாகவே எங்களை பார்க்கிறோம். நாங்கள் தரத்தின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம். தரம் நல்லதாக இருந்தால் நீங்கள் எந்த பின்னணி உடையவர்கள் என்பது முக்கியம் இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.