By: WebDesk
Updated: October 29, 2018, 03:07:39 PM
Oneplus 6T launches today
OnePlus 6T features : ஒன்ப்ளஸ் என்ற போன், இந்தியர்களுக்கு ப்ரீமியம் போன்களின் மாற்று என்று தான் கூற வேண்டும். ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களுக்கு இணையாக ஆனால் மிகவும் குறைந்த விலையில் வெளியாகிய ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் இன்றைய இளைஞர்களின் பெரும்பான்மை தேர்வாகும்.
இந்த போனின் சிறப்பம்சமே இதில் எடுக்கப்படும் புகைப்படங்களும், பேட்டரி பேக்கப்பும் தான். இந்த நிறுவனத்தின் புதிய போனை நாளை அறிமுகப்படுத்த இருந்தது இந்நிறுவனம். ஆனால் நாளை ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிவைஸ்கள் வெளியாவதால் இன்று இரவு இந்த 6Tவினை வெளியிட முடிவு செய்திருந்தது இந்நிறுவனம்.
ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (OnePlus 6T features )
6T போனானது வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் திரையில் வெளியாக இருக்கிறது. 6.4 அங்குல அளவிலான போனில் 6.28 AMOLED திரை உருவாக்கப்பட்டிருக்கிறது. ரெசலியூசன் 2280 x 1080 ஆகும். ஸ்க்ரீன் லாக்கிங் ஃபிங்கர் பிரிண்ட்டானது திரைக்கு அடியில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
கொரிலா க்ளாஸ் 6 ப்ரோடெக்சனுடன் வெளியாக இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் இது தான்.
இதனுடைய பேட்டரி சேமிப்புத் திறன் என்பது 3700 mAh ஆகும். ஹெட்செட் போட்டு பாட்டு கேட்கப் பயன்படும் 3.5 எம்.எம். ஜேக் இந்த போனில் இல்லை.
வயர்லெஸ் சார்ஜ் டெக்னாலஜி மூலம் இந்த போனை சார்ஜ் செய்து கொள்ள இயலாது என்பதை ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பீட் லாவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஆக்ஸிஜன் OSல் இந்த போன் இயங்க உள்ளது. இந்த போனின் ப்ரோசசர் ஸ்நாப்ட்ராகன் 845 ஆகும்.
OnePlus 6T features : கேமரா சிறப்பம்சங்கள்
இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கிறது 6T. முதன்மை கேமரா 16 எம்.பி செயல்திறனும், இரண்டாவது கேமரா 20 எம்.பி. செயல்திறனும் கொண்டிருக்கிறது. 6Tயில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் பீட் லாவ். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
ஒன்ப்ளஸ் 6T போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்
எப்படி வாங்கலாம் ?
இந்தியாவில் இந்த போனின் அறிமுக விழா நாளை நடைபெற உள்ளது. இந்தியாவில் இந்த போனை அமேசான் இணைய வர்த்தக தளத்தில் ஃப்ரீபுக்கிங்க் செய்து கொள்ளும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். 40,000 ரூபாய்க்கு விற்பனையாக இருக்கும் இந்த போன் நவம்பர் 2ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
இந்தியாவில் எப்போது வெளியீடு ?
சர்வதேச அளவில் இந்த போன் இன்று வெளியிடப்பட்டாலும், நாளை இரவு 08.30 மணிக்கு இந்த போன் KDJW அரங்கில் இரவு 08.30 மணிக்கு வெளியாகிறது. இந்த விழாவினை யூட்யூப் மூலம் லைவாகவும் பார்க்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.