ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. ஒன்ப்ளஸ், இந்தியாவில் மக்களின் ஆதரவினைப் பெற்ற ப்ரீமியம் போன்களில் ஒன்றாகும். அதனுடைய அடுத்த ப்ரீமியம் போனான 6Tக்காக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எப்போது எங்கு வெளியாகும் என்ற தகவல்களை வழங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
வருகின்ற அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் அறிமுக விழா இருக்கும். வருகின்ற நவம்பர் மாதம் முதல் அமேசான் இணைய விற்பனை தளத்தில் விற்பனையாகும். தற்போது ப்ரீபுக்கிங் செய்து கொள்ளும் வசதியினை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஒன்ப்ளஸ் 6Tயின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த போனைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இருக்கும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் ஸ்க்ரீன் அன்லாக். கடந்த முறை வெளிவந்த ஒன்ப்ளஸ் 6ல் ஃபிங்கர்ப்ரின்ட் சென்சார் போனின் பின்பக்கத்தில் இருந்தது. தற்போது வெளிவர இருக்கும் புதிய போனில் நாம் பார்க்கும் தொடு திரைக்கு அடியில் இந்த போன் இருக்கிறது. இந்த சிறப்பம்சம் தற்போது வெளியாகியுள்ள விவோ மற்றும் ஓப்போ போன்களில் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போன் இதர சிறப்பம்சங்கள்
6.4 இன்ச் அளவுள்ள ஃபுல் ஹெச்.டி. போனின் திரையானது AMOLEDயால் உருவாக்கப்பட்டது. கொரில்லா க்ளாசில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3700mAh பேட்டரி திறனுடன் வெளிவருகிறது இந்த போன். ஒன்ப்ளஸ் 6ல் வந்த அதே டாஷ்சார்ஜ் டெக்னாலஜி இதிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்ட் பை இயங்கு தளத்தில் இயங்க இருக்கும் இந்த போனின் ப்ரோசஸ்ஸர் ஸ்னாப்ட்ராகன் 845 ஆகும். மிட்நைட் ப்ளாக் மற்றும் ட்விலைட் ப்ளாக் நிறங்களில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.