OnePlus 6T New Updates : இந்தியாவில் விற்பனையாகும் ப்ரிமியம் போன்களில் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெளியான சில ஆண்டுகளிலேயே வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற மிட்ரேஞ்ச் போன்களில் இதுவும் ஒன்று.
Advertisment
ஒன்ப்ளஸ் 6 போன் இந்த வருடம் மே மாதத்தில் வெளியானது. அதில் சில மாற்றங்களை உருவாக்கி ஒன்ப்ளஸ் 6T என்ற ஸ்மார்ட் போனாக வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
அக்டோபர் 30ம் தேதி நியூயார்க் நகரில் இந்த போனின் அறிமுக விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் நிறுவனத்தினர். ஆனால் அதே தினம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட்கள் மற்றும் மேக்புக்குகள் வெளியாக இருக்கின்ற காரணத்தால் அறிமுக விழாவினை அக்டோபர் 29ம் தேதி மாற்றிவைத்து அறிவிப்பினை வெளியிட்டனர். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
OnePlus 6T New Updates : ஒன்ப்ளஸ் 6T யில் எடுக்கப்பட்ட புகைப்படம்
இந்தியாவில் அக்டோபர் 30ம் தேதி அறிமுக விழா நடைபெறுகிறது. அதே போல் ஷேன்ச்சென் நகரில் வருகின்ற நவம்பர் 5ம் தேதி இந்த போன் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த போனில் இருந்து எடுக்கப்பட்ட இரவு நகர புகைப்படத்தை தன்னுடைய வெய்போ தளத்தில் பதிவிட்டிருக்கிறார் பீட் லாவ்...
ஒன்ப்ளஸ் 6T போனில் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
6T போனானது வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் திரையில் வெளியாக இருக்கிறது. 6.4 அங்குல அளவிலான போனில் 6.28 AMOLED திரை உருவாக்கப்பட்டிருக்கிறது. ரெசலியூசன் 2280 x 1080 ஆகும். ஸ்க்ரீன் லாக்கிங் ஃபிங்கர் பிரிண்ட்டானது திரைக்கு அடியில் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதனுடைய பேட்டரி சேமிப்புத் திறன் என்பது 3700 mAh ஆகும். ஹெட்செட் போட்டு பாட்டு கேட்கப் பயன்படும் 3.5 எம்.எம். ஜேக் இந்த போனில் இல்லை.
வயர்லெஸ் சார்ஜ் டெக்னாலஜி மூலம் இந்த போனை சார்ஜ் செய்து கொள்ள இயலாது என்பதை ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பீட் லாவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.