/tamil-ie/media/media_files/uploads/2019/04/oneplus7teaser759.jpg)
OnePlus 7 Pro First Official Teaser
OnePlus 7 Pro First Official Teaser : ஒன்ப்ளஸ் 6T-யின் மெக்லாரன் வந்த பிறகு, அடுத்த போன் பற்றிய எந்த வித அறிவிப்பும் இல்லாமல் இருந்தது அவ்வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே விளைவித்தது. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ போன்ம்கள் மே மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாமல் இருந்தது.
OnePlus 7 Pro First Official Teaser
இந்நிலையில், இந்த போன் சீரியஸின் முதல் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளார் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான பீட் லௌ.
Excited to share the next product from OnePlus will unleash a new era of Fast and Smooth. Especially Smooth! Smooth is more challenging than Fast - a true test of hardware and software.
The new product is just beautiful - I can't wait for you to see it! ????✨ pic.twitter.com/yPU9sEbeIv
— Pete Lau (@petelau2007) 17 April 2019
ஃபாஸ் அண்ட் ஸ்மூத் என்ற டேக்லைனோடு முடியும் அந்த டீசரில் ஏதோ மர்மம் இருப்பதாகவே ஒன்ப்ளஸ் போனின் வாடிக்கையாளர்கள் கூறியுள்ளர். Smooth-ல் ட்ரிப்பிள் ஓ வந்திருப்பது தான் அந்த மர்மத்திற்கு காரணம். மூன்று பின்பக்க கேமராக்களோடு இந்த போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ப்ளஸ் போன் வாங்குபவர்களின் முக்கிய விருப்பமே அதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தான். மிகவும் க்ளாசாக, துல்லியமாக புகைப்படம் எடுப்ப்பதற்காகவே இந்த போன்கள் வாங்குவது அதிகம். இன்னும் ஓரிரண்டு நாட்களில் அந்த போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பீட் அப்லோட் செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.