இந்த விலைப்பட்டியலில் இப்படி ஒரு ஆண்ராய்ட் போனை பார்க்கவே முடியாது! ஒன்ப்ளஸ் 7 ப்ரோ ரிவ்யூ

தங்கள் போன்களின் விலையில் பெரிய அளவில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதே ஒன்ப்ளஸ் போனின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறலாம்.

By: Updated: May 15, 2019, 02:23:08 PM

Nandagopal Rajan

OnePlus 7 Pro review : ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனின் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ மற்றும் ஒன்ப்ளஸ் 7 போன்கள் நேற்று அமெரிக்கா, லண்டன். மற்றும் பெங்களூருவில் வெளியாகின. சிறப்பான  புகைப்படங்கள், ஸ்லீக், ஸ்டைலிஷ், மற்றும் பட்ஜெட்டிற்குள் நிற்கும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் என்பதால் ஒன்ப்ளஸ் ப்ரோடக்ட்டுகளுக்கு என்றுமே வரவேற்பு அதிகம்.

தங்கள் ப்ரோடக்ட்டுகளின் விலையில் பெரிய அளவில் சமரசம் செய்து கொள்ளாமல் இருப்பதே ஒன்ப்ளஸ் போனின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறலாம். ஒவ்வொரு அப்கிரேடிலும் அடிப்படை விலையினை ஆதரமாக வைத்து சிறிதளவே விலையில் மாற்றம் செய்யப்படும்.

மேலும் படிக்க : எங்களின் போனுக்கு எப்போதும் 2 ஆயிரம் டாலர்கள் விலையில்லை ! ஒன்ப்ளஸின் வித்தியாசமான விளம்பரம்…

OnePlus 7 Pro review: வடிவமைப்பு  மற்றும் திரை

வியக்க வைக்கும் திரையுடன் வெளியாகியுள்ளது இந்த போன். 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டுடன், இயக்கத்திற்கு மிகவும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரைட்னெஸ் 800 நிட்ஸ் ஆகும். சூரிய வெளிச்சத்திற்கு கீழ் வேலை செய்வதில் கொஞ்சம் பிரச்சனையாக இருந்தாலும், இதற்கு முன்பு இப்படியான திரை அமைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன் உருவாகவில்லை என்று தான் கூற இயலும்.

கர்வ்ட் ஸ்கிரினுடன் வெளியாகி இருக்கும் இந்த போனின் திரையில் சில கண்டெண்ட்டுகள் சரியாக ஃபிட்டாகவில்லை. குறிப்பாக இன்ஸ்டாகிராம் உபயோகப்படுத்தும் போது.

இந்த போனில் குறிப்பிடப்படும் மற்றொரு சிறப்பம்சம் இதன் பேட்டரி ஆகும். 4000mAh செயல்திறன் கொண்டுள்ள பேட்டரி இந்த போனின் எடையை உறுதி செய்கிறது. 210 கிராம் எடை கொண்ட போன் என்பது கொஞ்சம் அதிகப்படியான எடையாகவே தெரிகிறது. கர்வ்ட் எட்ஜ் கொண்ட போன் என்பதால் இதை கையாளும் போது கொஞ்சம் கவனமுடன் இருப்பது நலம்.

Dolby Atmos -உடன் கூடிய இரட்டை ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

OnePlus 7 Pro review: Camera

வாடிக்கையாளர்கள் அதிகம் நம்பும் ஒன்ப்ளஸ் போன்களின் மிக முக்கியமான சிறப்பம் இந்த போன்களில் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா தான். செல்ஃபி கேமரா பற்றி முதலில் பேசி விடுவோம். பாப்-அப் செல்ஃபி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி கேமரா ஆப்சனை க்ளிக் செய்தவுடன் பெரிஸ்கோப் போன்ற தோற்றத்தில் போனில் இருந்து பாப் அப் ஆகும் இந்த கேமரா. 16 எம்.பி. செயல்திறன் கொண்டதாகும் இந்த ஸ்மார்ட்போன்.

பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ள மூன்று கேமராக்களில் வைட் ஆங்கிள் கேமரா (16 எம்.பி) சிறப்பான முறையில் 117 டிகிரியில் கண்ணுக்கு முன்னே இருக்கும் காட்சிகளை படம் பிடிக்கிறது.

OnePlus 7 Pro மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

 

 

 

 

 

மூன்று கேமராக்களில் அடுத்த ஒன்று 48 எம்.பி. கேமராவாகும். இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள், சிறந்த டி.எஸ்.எல்.ஆரில் எடுக்கப்படும் புகைப்படங்களுக்கு இணையாக உள்ளது. குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிக துல்லியமாக உள்ளன.

இதர சிறப்பம்சங்கள்

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 பொருத்தப்பட்டுள்ளது

எத்தனை ஆப்களை ஓப்பன் செய்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் போன் சூடாவதே இல்லை. இது போன்ற சிறப்பம்சங்கள் அதுவும் 12ஜிபி/256 இண்டெர்நெல் ஸ்டோரேஜ் கொண்ட போன் கூலாக இருப்பது மிகவும் ரேரான ஒன்றாகவே இருக்கிறது.

ஆக்ஸிஜன் இயங்குதளத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போன் மிகவும் ஸ்மூதாக இயங்குகிறது. எங்கும் எந்த தடையும் இல்லை. மாற்றுத்திறனாளிகள் உபயோகிக்கும் வகையிலும் இந்த போன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

20 நிமிடங்களுக்கு எதைப்பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக அமர்வதற்காகவே ஜென் மோட் என்ற ஒரு ஆப்சனை கொண்டு வந்துள்ளது இந்த போன்.

ஈரமான விரல்களை பயன்படுத்தினாலும் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வேலை செய்கிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 4ஜியில் 12 மணிநேரம் வரை பேட்டரி நிற்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Technology News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Oneplus 7 pro review price features availability in india and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X