OnePlus 7 Smartphone : ஒன்ப்ளஸ் 7 போன் வருகின்ற மே மாதத்திற்குள் வெளியாகலாம் என்று அறிவிப்புகள் பரவத் துவங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து அந்த போனின் புகைப்படங்கள் மற்றும் டிசைன், சிறப்பம்சங்கள், விலை போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகத் துவங்கியுள்ளன.
ஒன்ப்ளஸ் 7னுடன் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ மாடலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் ஒன்ப்ளஸ் 3 போனிற்கு பிறகு இது வரை சிங்கிள் வேரியண்டுகளை மட்டுமே வெளியிட்டு வந்தது ஒன்ப்ளஸ் நிறுவனம். ஆனால் ஒன்ப்ளஸ் 6 வெளியான 5 மாதங்களில் அதன் 6டி வேரியண்ட்டுகள் வெளியிடப்பட்டன.
OnePlus 7 Smartphone சிறப்பம்சங்கள்
இந்த போன் சிங்கிள் வேரியண்ட்டாக வெளியாகமால் ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ 5ஜி என்று மூன்று வேரியண்ட்டுகளாக வெளியாகின்றன. ஏற்கனவே 50 ஆயிரம் என்ற பட்ஜெட்டை தாண்டி 6டி மெக்லாரன் வெளியிடப்பட்ட நிலையில், ஒன்ப்ளஸ் விலை கட்டுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோட்ச் இல்லாத இரட்டை கர்வ்ட் திரையுடன் வெளியாகிறாது இந்த போன்
இந்த போனில் பாப் அப் செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது
மூன்று பின்பக்க கேமராக்களையும் (of 48MP + 16MP + 8MP), 6.67 இன்ச் அளவுள்ள சூப்பர் ஆப்டிக் டிஸ்பிளேயுடனும் வெளியாக உள்ளது இந்த போன்.
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்
மேலும் படிக்க : டி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கே சவால் விடும் ஹூவாயின் பி30 ப்ரோ ஸ்மார்ட்போன்…
ஸ்மார்ட்போன்களில் எப்போதும் சிங்கிள் கலர் பேக் பேனல் என்ற ஃபேஷனை மாற்றி எழுதியுள்ளது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ் 7னின் சிறப்பம்சங்களில் முக்கியமான ஒன்று அதன் நிறங்களாகும். ப்ளாக் பர்பிள், ப்ளாக் யெல்லோ, மற்றும் சியான் கிரே என்று க்ரேடியண்ட் கலர்களில் வந்துள்ளது இந்த போன்.