OnePlus 7T & 7T Pro FAQ : அனைவரும் ஆப்பிளின் ஐபோன்களுக்கும் சாம்சங்கின் கேலக்ஸிகளுக்கும் தவமாய் தவமிருக்க அனைவரின் எதிர்பார்ப்பையும் மிகவும் குறைவான விலையில் பூர்த்தி செய்ய துவங்கியது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான பின்பு மொபைல் போட்டோகிராஃபியும் வலுவான இடத்தை சமூக வலைதளங்களில் பிடிக்க துவங்கியது. இதன் கலர் அவுட்புட், துல்லியமான புகைப்படங்கள், சார்ஜிங் கெப்பாசிட்டி என அனைத்தும் அனல் பறக்க இந்தியாவின் ஃபேவரைட் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களாக அனைவரின் மனதிலும் நிலைத்துவிட்டது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்.
இந்த வருடத்தில் மட்டும் ஒன்ப்ளஸ் 7 சீரிஸில் நான்கு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் (நவம்பர் 6) ஒன்ப்ளஸ் 7T மற்றும் 7T Pro ஸ்மார்ட்போன்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் ஏதாவது ஒன்றை வாங்கும் முன்பு உங்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். அதனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் தெளிவான பதில்களை நீங்கள் படித்த பிறகு இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது குறித்து நீங்கள் யோசனை செய்யுங்கள்.
48 எம்.பி. கேமராவை பயன்படுத்துவது எப்படி?
இந்த ஸ்மார்ட்போன் சோனி நிறுவனத்தின் IMX586 என்ற 48 மெகா பிக்சல் கொண்ட லென்ஸை பெற்றிருக்கிறது. இதனுடன் மேலும் அல்ட்ரா வைட் லென்ஸ், டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் மேக்ரோ போட்டோகிராஃபி லென்ஸூம் பொறுத்தப்பட்டிருக்கிறது. இந்த மேக்ரோ லென்ஸ் மூலமாக நீங்கள் சின்னச்சின்ன உயிரினங்களை மிக அருகில் அதாவது 2.5 செ.மீ தொலைவில் இருந்தும் புகைப்படம் எடுக்கலாம். அதன் அவுட்புட் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவ்வளவு துல்லியமாக அமையும். டீஃபால்ட்டாகவே 12 எம்.பி. ரெசலியூசனில் தான் புகைப்படங்கள் எடுக்க இயலும். இந்த 48 எம்.பிக்கான முழுமையான புகைப்படங்களை நீங்கள் எடுக்க விரும்பினால் ப்ரோ மோட் செட்டிங்கில் JPG 48 MP இந்த ஆப்சனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். சோசியல் மீடியாவில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் புகைப்பட கலைஞர்கள் என்ற கம்யூனிட்டியையே உருவாக்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வேற லெவல்.
ரெஃப்ரெஷ் ரேட் மூலமாக பேட்டரி சீக்கிரமாக குறைய வாய்ப்புகள் உள்ளதா?
7T ஸ்மார்ட்போனின் பேட்டரி 3800mAh திறன் கொண்டது. 7T Pro 4,085mAh திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் இரண்டின் ரெஃப்ரெஷ் ரேட்டும் மிக அதிக அளவில் இருப்பதால், அதாவது 90 ஹெர்ட்ஸில் இருப்பதால் நம்மால் மிகவும் துல்லியமான, தடையற்ற வீடியோக்கள் மற்றும் படங்களை பார்க்கவும், கிராஃபிக்ஸினை பயன்படுத்தவும் இயலும். இதனால் பேட்டரியும் விரைவில் காலியாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இது போன்று விரைவாக பேட்டரி செயல்திறன் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் 30T சார்ஜர்களை அறிமுகம் செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சார்ஜரின் சிறப்பம் என்ன?
இதற்கு முன்பு வெளியான சார்ஜர்கள் மூலம் சார்ஜ் ஆவதைக் காட்டிலும் 23% விரைவாக உங்களின் ஸ்மார்ட்போன்களை இந்த Warp Charge 30T தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் சார்ஜ் செய்துவிடும். வெறும் அரை மணி நேரத்தில் 70% வரை உங்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிட இயலும்.
7T மற்றும் 7T Pro-வின் விலை
இதற்கு முன்பு வெளியான ஸ்மார்ட்போன்களின் விலை ஓரளவுக்கு அனைவராலும் வாங்க இயலும் வகையில் இருந்தது. ஆனால் கடந்த இரண்டு சீரிஸில் வெளியான ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 30 ஆயிரம் தாண்டியதாகவே இருக்கிறது. ஐபோனுக்கும், கேலக்ஸி போனுக்கும் இது பராவாயில்லை என்ற வகையில் தான் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்களின் விலை. ஆனாலும் இந்தியாவின் பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் குறைந்த விலையில் ஒரு வேரியண்ட் இல்லை என்பது கொஞ்சம் கவலைக்குரிய விசயம் தான்.
7T Pro-வின் விலை - ரூ. 53,999
7T-யின் விலை - ரூ. 37,999
மேலும் படிக்க : ரூ. 12 ஆயிரம் மதிப்பு உள்ள ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?