புதிய அப்டேட்கள் எதுவும் இல்லாமல் வெளியாகிறதா ஒன்ப்ளஸ் 7டி ப்ரோ மெக்லாரென்?

இந்தியாவில் இந்த இரண்டு போன்களும் அக்டோபர் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

OnePlus 7T Pro renders leak McLaren Edition
OnePlus 6T McLaren Edition

OnePlus 7T Pro renders leak McLaren Edition : ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் புதிய போன் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ இந்த வருடம் மே மாதம் வெளியானது. அதனைத் தொடர்ந்து அந்த ஸ்மார்ட்போனின் புதிய இரண்டு வேரியண்ட்டுகளான ஒன்ப்ளஸ் 7டி ப்ரோ, ஒன்ப்ளஸ் 7டி ப்ரோ மெக்லாரென் (OnePlus 7T Pro and OnePlus 7T Pro McLaren) ஸ்மார்ட்போன்கள் 26ம் தேதி வெளியாகின்றன.

சில சிறப்பான புதிய அப்டேட்களை நாம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நமக்கான அப்டேட் என்னவோ மிகவும் குறைவு தான். தற்போது லீக்கான இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகளில் ஒன்றும் அவ்வளவு பெரிய வேறுபாடோ, அல்லது புதிய அப்டேட்களோ இல்லை.

மேலும் படிக்க : உலகின் முதல் மடக்கு போன் கேலக்ஸி ஃபோல்ட் 6ம் தேதி வெளியாகிறது…

OnePlus 7T Pro, OnePlus 7T Pro McLaren சிறப்பம்சங்கள்

இரண்டும் ( OnePlus 7T Pro, OnePlus 7T Pro McLaren ) பார்ப்பதற்கு ஒன்று போலவே தான் இருக்கின்றன. புகழ்பெற்ற @OnLeaks மற்றும் 91mobiles ட்விட்டர் பக்கங்களும் இதை உறுதி செய்துள்ளது.

மெக்லாரென் எடிசனைப் பொறுத்த வரையில் சென்ற வருடம் வெளியான ஒன்ப்ளஸ் 6டி மெக்லாரென் ஸ்மார்ட்போனின் புதிய அப்டேட்டாக இந்த போனை நாம் பார்க்கலாம். இந்த இரண்டு போன்களும் கர்வ்ட் எட்ஜ் – டூ – எட்ஜ் ஸ்கிரீன்களை கொண்டுள்ளது.

6.67 இன்ச் 2கே டிஸ்பிளே
90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்
ஸ்நாப்ட்ராகன் 855+ ப்ரோசசர்
8ஜிபி ரேம் _256 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் என எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இந்த இரண்டு போன்களும் ஒரே சிறப்பம்சங்களைப் பெற்றுள்ளது.

மெக்லாரென் ஸ்மார்ட்போன் மட்டும் 12 ஜிபி ரேமை கொண்டுள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு போன்களும் அக்டோபர் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Oneplus 7t pro renders leak mclaren edition also be announced on sep

Next Story
உலகின் முதல் மடக்கு போன் கேலக்ஸி ஃபோல்ட் 6ம் தேதி வெளியாகிறது…samsung foldable phone, Samsung Galaxy F foldable Phone, Samsung Galaxy Fold launch date announced
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com