/tamil-ie/media/media_files/uploads/2019/09/sachin-50.jpg)
OnePlus 7T specifications, price, features, camera, availability
OnePlus 7T specifications, price, features, camera, availability : ஒன்ப்ளஸ் நிறுவனம் நேற்று தங்களுடைய ஒன்ப்ளஸ் 7டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு முழுமையான அலசல் இதோ. இந்த வருடம் ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மிக சமீபமாக வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாயின. 28ம் தேதியில் இருந்து ஒன்ப்ளஸ் மற்றும் அமேசான் இணையங்களில் விற்பனைக்காக வருகிறது.
மேலும் படிக்க : 1.5 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்
OnePlus 7T: Full specifications, features
ஒன்ப்ளஸ் 7டி ஸ்மார்ட்போன் 6.55 ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும்.
எச்.டி.ஆர்.10+ கம்பேட்டிபளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்போனின் அஸ்பெக்ட் ரேசியோ 20:9 ஆகும். ஒன்ப்ளஸ் 6டியை விட 31.46% குறைவான வாட்டர் ட்ராம் நோட்சை கொண்டுள்ளது.
ரெசலியூசன் 2400 x 1080 பிக்சல்களாகும்
3டி கார்னிங் கொரில்லா க்ளாஸூடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் எடை 190 கிராம்.
இதன் ப்ரைட்னெஸ் 1000 நிட்ஸ்களாகும்
இண்டெர்நெல் லுமினிசண்ட் மெட்டிரியல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேட்-ஃப்ரோஸ்டெட் க்ளாஷ் ஃபினிஷிங்குடன் கூடிய பின்பக்க வடிவமைப்பில் சில்வர் மற்றும் க்ளாசியர் ப்ளூ நிற போன்கள் மிகவும் அழகாக உள்ளது.
855+ குவால்கோம் ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜி.பி.யூ அட்ரெனோ 640 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளாது.
8ஜிபி ரேமுடன் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ், 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளைப் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
48 எம்.பி (முதன்மை கேமரா) + 16 எம்.பி. (அல்ட்ரா-வைட் கேமரா) + 12 எம்.பி (டெலிஃபோட்டோ கேமரா)
பேட்டரி : 3800 mAh
ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கி வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.
விலை : ரூ. 39,999
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.