28ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 7டி… சிறப்பம்சங்கள் என்னென்ன?

ஒன்ப்ளஸ் 6டியை விட 31.46% குறைவான வாட்டர் ட்ராம் நோட்சை கொண்டுள்ளது.

OnePlus 7T specifications, price, features, camera, availability
OnePlus 7T specifications, price, features, camera, availability

OnePlus 7T specifications, price, features, camera, availability  : ஒன்ப்ளஸ் நிறுவனம் நேற்று தங்களுடைய ஒன்ப்ளஸ் 7டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. மூன்று பின்பக்க கேமராக்களுடன் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு முழுமையான அலசல் இதோ. இந்த வருடம் ஒன்ப்ளஸ் 7, 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் மிக சமீபமாக வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாயின. 28ம் தேதியில் இருந்து ஒன்ப்ளஸ் மற்றும் அமேசான் இணையங்களில் விற்பனைக்காக வருகிறது.

மேலும் படிக்க : 1.5 லட்சம் ரூபாய் விலையில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்

OnePlus 7T: Full specifications, features

ஒன்ப்ளஸ் 7டி ஸ்மார்ட்போன் 6.55 ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெஃப்ரெஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும்.

எச்.டி.ஆர்.10+ கம்பேட்டிபளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்போனின் அஸ்பெக்ட் ரேசியோ 20:9 ஆகும். ஒன்ப்ளஸ் 6டியை விட 31.46% குறைவான வாட்டர் ட்ராம் நோட்சை கொண்டுள்ளது.

ரெசலியூசன் 2400 x 1080 பிக்சல்களாகும்

3டி கார்னிங் கொரில்லா க்ளாஸூடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் எடை 190 கிராம்.

இதன் ப்ரைட்னெஸ் 1000 நிட்ஸ்களாகும்

இண்டெர்நெல் லுமினிசண்ட் மெட்டிரியல் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேட்-ஃப்ரோஸ்டெட் க்ளாஷ் ஃபினிஷிங்குடன் கூடிய பின்பக்க வடிவமைப்பில் சில்வர் மற்றும் க்ளாசியர் ப்ளூ நிற போன்கள் மிகவும் அழகாக உள்ளது.

855+ குவால்கோம் ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜி.பி.யூ அட்ரெனோ 640 கிராஃபிக்ஸ் ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளாது.

8ஜிபி ரேமுடன் 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ், 256 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளைப் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

48 எம்.பி (முதன்மை கேமரா) + 16 எம்.பி. (அல்ட்ரா-வைட் கேமரா) + 12 எம்.பி (டெலிஃபோட்டோ கேமரா)

பேட்டரி : 3800 mAh

ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கி வருகிறது இந்த ஸ்மார்ட்போன்.

விலை : ரூ. 39,999

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Oneplus 7t specifications price features camera availability and more

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com