scorecardresearch

ரூ. 50 ஆயிரம் கொடுத்து ஒன்ப்ளஸ் 9 போனை வாங்கலாமா? டெக்கீகளின் கருத்து என்ன?

கேமரா முன்பைக் காட்டிலும் சிறப்பாக இருக்கின்ற போதிலும், ப்ரீமியம் போன்களுடன் போட்டியிடுவதற்கான வகையில் இன்னும் மெருகேற்றப்படவில்லை என்று தான் கூற வேண்டும்.

OnePlus 9 review: The killer feature here is the camera

OnePlus 9 Android smartphone review : ஆண்ட்ராய்ட் உலகில் ஒன்ப்ளஸ் போனிற்கு மட்டும் வாடிக்கையாளர்கள் இல்லாமல் ரசிகர் பட்டாளம் இருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். சமீபத்தில் இந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியானது. ஒன்ப்ளஸ் 9, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ, ஒன்ப்ளஸ் 9ஆர் போன்ற போன்கள் தற்போது டெக்னாலஜி உலகில் பேசு பொருளாக இருக்கிறது என்றால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது ஹசல்ப்ளட் (Hassleblad) கேமராக்கள். சோனி, கேனான், நிக்கான் போன்று தொழில்முறை கேமராக்களை உருவாக்கும் இந்நிறுவனத்தின் கேமராக்களை ஒன்ப்ளஸ் இம்முறை பயன்படுத்தியுள்ளது.

கேமரா முன்பைக் காட்டிலும் சிறப்பாக இருக்கின்ற போதிலும், ப்ரீமியம் போன்களுடன் போட்டியிடுவதற்கான வகையில் இன்னும் மெருகேற்றப்படவில்லை என்று தான் கூற வேண்டும். இன்று நாம் பார்க்க இருக்கும் ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 9.

இதன் சிறப்பம்சங்கள்

6.55 இன்ச் ( (2400×1080 பிக்சல் ரெசலியூசன்)
இதன் தொடுதிரை 120 ஹெர்ட்ஸ் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி. நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது
குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 888 ப்ரோசசர், 8 ஜிபி/12ஜிபி LPDDRS ரேம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது
128 ஜிபி அல்லது 256 ஜிபி ஸ்டோரேஜ் இருப்பதால் நீங்கள் விரும்பிய அளவிற்கு டேட்டாவை இதில் சேமித்துக் கொள்ளலாம்.
முந்தைய போன்களில் இருக்கும் இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் ஸ்கேனர் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4500mAh பேட்டரி
மூன்று பின்பக்க கேமரா, 16 ஜிபி செல்ஃபி கேமரா
இயங்குதளம் ஆண்ட்ராய்ட் 11-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்ஸிஜன் 11

இந்த போனின் விலை ரூ. 49,999 ஆகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

இதில் புதிதாக என்ன இருக்கிறது?

வெளியில் இருந்து எந்த விதமான டிசைனையும் உள்ளே புகுத்தாமல், ஏற்கனவே வெளியான ஒன்ப்ளஸ் முந்தைய தலைமுறை போன்களில் இருக்கும் டிசைனிற்கே மறுவடிவம் கொடுத்துள்ளனர். ஒன்ப்ளஸ் 8டியில் இருந்த அதே வடிவமைப்பு தான் இதிலும் இருக்கிறது.

போனின் இரண்டு பக்கமும் அலுமினியம் பயன்படுத்த, பின்புறம் க்ளாஸ் மெட்டிரீயல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

லிலக் பர்புள் மற்றும் விண்டர் மிஸ்ட் ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ள போன்கள் பார்க்க அழகாக இருக்கிறது. ஹெட்போன் ஜேக்கும் இல்லை, நீர்புகாமல் இருக்குமா என்பதை உறுதி செய்யும் ஐ.பி. ரேட்டிங்கும் இதில் இல்லை.

OnePlus 9 Android smartphone review

இந்த வருடம் வெளியாகியுள்ள இந்த போனின் முக்கிய நோக்கம் எல்லாம் சிறந்த கேமராவை வழங்க வேண்டும் என்பது தான். ஹாஸல்ப்ளட் நிறுவனம், கேமரா பகுதியில் இயங்கும் மென்பொருள் தொடர்பாக சிறப்பான உதவிகளை ஒன்ப்ளஸிற்கு செய்துள்ளது.

ஒன்ப்ளஸ் 8டியில் இருப்பதை போன்றே வைட், அல்ட்ரா வைட் மற்றும் மோனோக்ரோம் லென்ஸ்கள் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த போனில் இருந்த டெலிஃபோட்டோ ஸூம் கேமரா இதில் இல்லை.

16 எம்.பி. செல்ஃபி கேமரா வேற தரம் என்று தான் கூற வேண்டும். செல்ஃபி ப்ரியர்களுக்கு என்றே உருவாக்கப்பட்ட இந்த போனில் எடுக்கப்படும் செஃல்பிக்களில் உண்மையான் நிறம், ஷார்ப்னஸ் என அனைத்தையும் பெற முடியும்.

இந்த போனை வாங்கலாமா?

ஆப்பிள் 12க்கு போட்டியாக இந்த போன் அறியப்பட்டாலும் கூட, பெரிய அளவில் மாற்றங்களை ஏதும் இதில் காண இயலவில்லை. ஒன்ப்ளஸின் ஆரம்ப கால போன்களை பயன்படுத்தும் நபர்கள் என்றால் தாரளமாக நீங்கள் இந்த போனை வாங்கலாம். ஆனால் 8டி பயன்படுத்தினால் நீங்கள் தேடும் அப்டேட்கள் இதில் இல்லை என்று தான் கூற வேண்டும். புதுமையை தர வேண்டும் என்ற விருப்பம் இல்லாமல் பழைய போன்களில் இருந்த வாடிக்கையாளர்களின் அதிருப்தியை நீக்கியுள்ளது இந்த போன்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Oneplus 9 android smartphone review the killer feature here is the camera