scorecardresearch

ஒன்ப்ளஸ் 9R vs ஒன்ப்ளஸ் 8T: விலை, வடிவமைப்பில் எது சிறந்தது?

Oneplus 9R vs Oneplus 8T price in India இந்த மாடலின் விலை ரூ.43,999. இது கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

Oneplus 9r vs oneplus 8t price in India design specifications compared Tamil News
Oneplus 9r vs oneplus 8t price in India design specifications compared Tamil News

Oneplus 9R Vs Oneplus 8T comparision Tamil News : ஒன்பிளஸ் 9 ஆர், இந்த ஆண்டு வெளியான அதன் மிகவும் மலிவு விலை ஸ்மார்ட்போன். இதன் ஆரம்ப விலை ரூ.39,999. இது, ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. ஆனால், பழைய ஒன்ப்ளஸ் 8டி-யும் அதே விலை வரம்பில் கிடைக்கிறது. ஒன்ப்ளஸின் பிரீமியம் தொலைபேசிகள் இரண்டும் ஒத்த விவரக்குறிப்புகளை வழங்குகின்றன. மேலும், அதன் முக்கிய வேறுபாடு, வன்பொருள் துறையில் மட்டுமே உள்ளது. ஒன்ப்ளஸ் 9 ஆர் மற்றும் ஒன்ப்ளஸ் 8டி ஆகியவற்றுக்கு இடையேயான விரைவான ஒப்பீடு இங்கே.

ஒன்ப்ளஸ் 9R vs ஒன்ப்ளஸ் 8T : இந்தியாவில் விலை

இந்தியாவில் ஒன்ப்ளஸ் 9 ஆர் விலை ரூ.39,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, 8 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுக்கானது. ஒன்ப்ளஸ் 9 ஆர்-ன் 12 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் பதிப்பையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.43,999. இது கார்பன் பிளாக் மற்றும் லேக் ப்ளூ என இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 8டி தற்போது OnePlus.in-ல், ரூ.40,499-க்கு கிடைக்கிறது. இது அக்வாமரைன் க்ரீன், லூனார் சில்வர் மற்றும் அக்வாமரைன் பச்சை ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் Amazon.in வழியாக சாதனங்களைப் பெறலாம்.

ஒன்ப்ளஸ் 9ஆர் vs ஒன்ப்ளஸ் 8டி: வடிவமைப்பு, காட்சி

வடிவமைப்பு துறையில் அதிக வித்தியாசம் இல்லை. ஒன்ப்ளஸ் 8டி மற்றும் ஒன்ப்ளஸ் 9 ஆர் இரண்டும் மெலிதான பெசல்கள் கொண்டவை. மேலும், செவ்வக கேமரா தொகுதியில் வைக்கப்பட்டுள்ள குவாட்-ரியர் கேமரா அமைப்பைக் கொண்ட வட்டவடிவமான காட்சியை வழங்குகின்றன. இரண்டு தொலைபேசிகளிலும் உள்ள செல்ஃபி கேமரா பஞ்ச்-ஹோல் கட்அவுட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஒன்ப்ளஸ் தொலைபேசிகளும் 6.55 இன்ச் முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) திரவ காட்சி 20: 9 விகிதத்துடன், 402 பிபி பிக்சல் அடர்த்தி, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனங்களில் HDR10 + சான்றிதழும் உள்ளது.

ஒன்ப்ளஸ் 9ஆர் vs ஒன்பிளஸ் 8டி: செயலி, மென்பொருள்

இதன் முக்கிய வேறுபாடு வன்பொருள் துறையில் உள்ளது. புதிய ஒன்ப்ளஸ் 9ஆர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட்டின் சற்றே மாற்றப்பட்ட பாதிப்பு. அதே சிப் ஏற்கனவே ரெட்மி கே 40 ஸ்மார்ட்போனை இயக்குகிறது.

ஒன்ப்ளஸ் 8டி ஒரு ஸ்னாப்டிராகன் 865 SoC-ஐக் கட்டுகிறது. இது அட்ரினோ 650 ஜி.பீ.யுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதே சிப்பின் ப்ளஸ் பதிப்பு ஸ்னாப்டிராகன் 865 SoC-ஐ விட 10 சதவீதம் சிறந்த CPU மற்றும் GPU செயல்திறனை வழங்குகிறது என்று குவால்காம் கூறியது. ஒன்ப்ளஸ் 8டி மற்றும் ஒன்ப்ளஸ் 9 ஆர் இரண்டிலும் பயனர்கள் இதேபோன்ற செயல்திறனைப் பெறுவார்கள்.

ஒன்ப்ளஸ் 9ஆர் vs ஒன்ப்ளஸ் 8டி: கேமரா விவரக்குறிப்புகள்

ஒன்ப்ளஸ் 9ஆர் மற்றும் ஒன்ப்ளஸ் 8டி இரண்டும் இதேபோன்ற கேமரா அமைப்பை வழங்குகின்றன. பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்பில் எஃப் / 1.7 துளை கொண்ட 48 எம்.பி சோனி ஐஎம்எக்ஸ் 586 முதன்மை சென்சார் உள்ளது. அதே சென்சார் மிகவும் மலிவான ஒன்ப்ளஸ் தொலைபேசியிலும் கிடைக்கிறது – ஒன்ப்ளஸ் நோர்ட்.

இந்த அமைப்பில் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் எஃப் / 2.2 துளை கொண்ட 16 எம்.பி சோனி ஐஎம்எக்ஸ் 481 சென்சார் உள்ளது. இது 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP மோனோக்ரோம் சென்சார் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 1080p மற்றும் 4K வீடியோக்களை 60fps வரை பதிவு செய்யலாம். செல்ஃபி மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்ய ஒற்றை 16MP f / 2.4 சோனி IMX471 சென்சார் உள்ளது.

ஒன்ப்ளஸ் 8டி மற்றும் ஒன்ப்ளஸ் 9ஆர் இரண்டும் சூப்பர் ஸ்லோ மோஷன், டைம் லாப்ஸ், வீடியோ போர்ட்ரெய்ட், அல்ட்ராஷாட் எச்டிஆர், நைட்ஸ்கேப், மேக்ரோ, போர்ட்ரெய்ட், ப்ரோ மோட், பனோரமா, ஸ்மார்ட் பெட் கேப்சர், ஏஐ சீன் கண்டறிதல், ரா இமேஜ், ஃபில்டர், வீடியோ போன்ற அம்சங்களுடன் வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Oneplus 9r vs oneplus 8t price in india design specifications compared tamil news