OnePlus concept one phone sports invisible rear camera : இந்த வருடம் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஏற்பட இருக்கும் பல்வேறு முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது கான்சப்ட் போன். ஒன்ப்ளஸ் நிறுவனம் தான் இதற்கு முன்னோடியாக இருக்கிறது. வருகின்ற கன்ஸ்ஹ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோவில் ஒன்ப்ளஸ் நிறுவனம் தங்களின் கான்சப்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது இதன் கேமராக்கள் எப்படி இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க மறைமுகமாக, இன்விசிபல் கேமராவாக பின்பக்க கேமரா செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளிக் செய்யும் போது உருவாகும் எலெக்ட்ரிக் சிக்னல் மூலமாக மட்டுமே இந்த கான்செப்ட் போனில் கேமரா எங்கே இருக்கும் என்றே தெரிய வரும்.
We’re bringing the #OnePlusConceptOne to #CES2020, but you don’t have to wait: you can get a sneak peek at it right here, along with its groundbreaking “invisible camera” and color-shifting glass technology. pic.twitter.com/elsV9DKctn
— OnePlus (@oneplus) January 3, 2020
ஒன்ப்ளஸ் நிறுவனம் இங்கிலாந்தின் மோட்டர் ரேசிங் கம்பெனியான மெக்லாரனுடன் இணைந்து செயல்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த ஒன்ப்ளஸ் கான்சப்ட்டிற்காக எலக்ட்ரோ-க்ரோமிக் கண்ணாடி தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த தொழில்நுட்பம் மெக்லாரனின் 720எஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக விமானங்களின் ஜன்னல்களிலும், கார்களில் சன்ரூஃபாகவும் இந்த மெட்டீரியல் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.