தற்போது வரும் பல்வேறு நிறுவன ஸ்மார்ட்போன்களில் கிரீன் லைன் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக OLED ஸ்கீரின்களில் கிரீன் லைன் பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. இந்நிலையில் "கிரீன் லைன்" பிரச்சனைகளை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்ட முதல் பிராண்ட் ஒன்பிளஸ், அதன் ஸ்மார்ட்போன்களில் வரும் இந்த பிரச்சனைக்கு லைஃவ் டைம் வாராண்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் இலவமாக ஸ்கீரின் ரீபிளேஸ்மெண்ட் செய்து தருவதாக அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் அனைத்து மாடல் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகையில், பயனர்களுக்கு இந்தச் சிக்கல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியிருப்பதை நாங்கள் உணர்கிறோம், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த பிரச்சனை எதிர்கொள்ளும் பயனர்கள் அருகிலுள்ள OnePlus சேவை மையத்தை அணுகி இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இலவமாக ஸ்கீரின் ரீபிளேஸ்மெண்ட் செய்து தரப்படும். குறிப்பிட்ட சாதனங்கள் OnePlus 8 மற்றும் 9 சீரிஸ் போன்களுக்கு போன் அப்கிரேட் செய்ய சிறந்த சலுகைகள், வவுச்சர்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் உள்பட சில குறிப்பிட்ட நிறுவன போன்களில் கிரீன் மற்றும் பிங்க் லைன் போன் திரையில் எவ்வித டேமேஜும் இல்லாமல் ஆட்டோமேட்டிக்காக வருகிறது. ஸ்கீரின் நடுவே அல்லது ஓரத்தில் vertical lines வருகிறது. இதற்கு ஒன்பிளஸ் பயனர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். எனினும் இதற்கான மூலக் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இருப்பினும் சில நிறுவனங்கள் இதற்கு தீர்வு கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“