/indian-express-tamil/media/media_files/2025/08/08/oneplus-nord-5-2025-08-08-21-41-01.jpg)
கேமிங் முதல் பெர்ஃபாமன்ஸ் வரை... 6,800mAh பேட்டரியுடன் களமிறங்கிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட்போனில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் வேண்டுமென்றால், ஹைஃபட்ஜெட்டாக இருக்கும் என்பது நமது பொதுவான எண்ணம். ஆனால், சில போன்கள் இந்த விதியை உடைத்தெறிந்து, நம் எதிர்பார்ப்புகளை தாண்டி நிற்கிறது. அந்த வரிசையில், புதிதாக வந்திருக்கிறது OnePlus Nord 5. இது வெறும் ஸ்மார்ட்போன் இல்ல, ரூ.30,000 பட்ஜெட்டில் கேமிங்கை புதிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் கேமிங் மான்ஸ்டர். இந்த போன் கேமிங்கில் மட்டுமில்லாமல், அனைத்து அம்சங்களிலும் தனித்து நிற்கிறது.
Nord 5-ன் இதயத்துடிப்பே அதன் Qualcomm Snapdragon 8s Gen 3 சிப்செட்தான். இந்த விலையில் சிப்செட் கிடைப்பது அரிதிலும் அரிது. இது BGMI மற்றும் Genshin Impact போன்ற கிராபிக்ஸ் நிறைந்த கேம்களைச் சிரமமின்றி இயக்குகிறது. பல மணிநேரம் விளையாடினாலும், எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் விளையாடலாம். இதற்கு முக்கியக் காரணம், சிப்செட்டின் ஆற்றல் மட்டுமில்லை. போனில் உள்ள 12GB LPDDR5X RAM மற்றும் hardware-accelerated ray tracing போன்ற அம்சங்கள் கேமிங் அனுபவத்தை மேலும் மெருகூட்டுகின்றன. இதன் மூலம், கேம்களில் வரும் ஒளிக் காட்சிகளும், நிழல்களும் மிகவும் தத்ரூபமாகத் தெரிகின்றன.
அதிக நேரம் கேம் விளையாடினால் போன் சூடாகிவிடுமோ என்ற கவலை இனி வேண்டாம். Nord 5-ல் உள்ள புதிய Cryo-velocity VC cooling system, பெரிய வேப்பர் சேம்பருடன் இணைந்து, போனை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. OnePlus நிறுவனத்தின் சோதனையின்படி, இந்த போன் 5 மணிநேரம் தொடர்ந்து விளையாடினாலும், மற்ற போன்களை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைவாகவே இருக்கும். இது பெரிய ப்ளஸ்.
கேமிங்கிற்கு வேகமாகச் செயல்படும் சிப்செட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குச் சிறப்பான டிஸ்பிளேவும் அவசியம். Nord 5-ன் 6.83-இன்ச் திரை, 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 3,000Hz டச் ரெஸ்பான்ஸ் உடன் வருகிறது. ஒரு செகண்டில் பலமுறை புதுப்பிக்கப்படும் திரை, கேமிங் காட்சிகளை மென்மையாகக் காட்டுகிறது. விளையாடும்போதும், போனைப் பயன்படுத்தும் போதும், அனைத்தும் வேகமாகவும், மிருதுவாகவும் இருப்பதை உணரலாம்.
6,800mAh பேட்டரி, ஒரு நாள் முழுதும் தாராளமாக நீடிக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜர், போனை வெறும் 90 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்கிறது. 50 mp முதன்மை கேமரா, பகல் வெளிச்சத்தில் துல்லியமான புகைப்படங்களை எடுக்கிறது. முன்பக்க கேமராவும் சிறப்பாகச் செயல்பட்டு, செல்ஃபிக்களைக் கவர்கிறது. 8.1 மிமீ தடிமனுடன், கையில் எளிதாகப் பொருந்துகிறது. OxygenOS software, தேவையற்ற செயலிகள் இல்லாமல், பயன்படுத்துவதற்கு எளிதாகவும், வேகமாகவும் உள்ளது.
OnePlus Nord 5-ன் விலை ரூ.31,999ஆக இருந்தாலும், வங்கி ஆபர்களுடன் ரூ.30,000-க்குக் கிடைக்கிறது. இந்த விலையில், இவ்வளவு அம்சங்களுடன் ஆல்-ரவுண்டர் போன் கிடைப்பது மிக அரிது. நீங்கள் கேமிங் பிரியராகவோ அல்லது சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போனைத் தேடுபவராகவோ இருந்தால், Nord 5 சரியான தேர்வாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.