OnePlus தனது Nord ஸ்மார்ட் கைபேசியை ஜீலை 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்போகிறது. இருப்பினும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே ரோமை சேர்ந்த ஒரு ஆன்லைன் விற்பனை தளமான ’evoMAG.ro’ வரவிருக்கும் அந்த கைபேசியின் முன் மற்றும் பின் பக்கத்துடன் கூடிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்த பட்டியலின்படி 8GB RAM/128GB சேமிப்பு (storage) திறன் கொண்ட அந்த கைபேசியின் உத்தேச விலை ரூபாய் 40,200/- (Leu 2,230.99) என்று நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisment
இந்த விலையை அமெரிக்க டாலர் கணக்கில் மாற்றும் போது இது $536 என வருகிறது. ஆனால் OnePlus முன்பு இந்த கைபேசியின் விலை $500 க்கு கீழ் தான் நிர்ணயிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கைபேசியின் பின்பகுதியில் 64MP primary sensor, 16MP secondary sensor மற்றும் 2MP tertiary sensor உடன்கூடிய triple camera setup இருக்கிறது. ஆனால் முன்பு இந்த மாடல் கைபேசி quad camera setup உடன் வரப்போகிறது என சொல்ல்ப்பட்டதற்கு நேர் எதிராக இது உள்ளது.
ஆனால் Android Centralன் வேறு ஒரு அறிக்கையின்படி இந்த OnePlus Nord கைபேசி quad rear camera setup உடன் வரப்போகிறது என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இது ரோமானிய ஆன்லைன் விற்பனை தளத்தின் கூற்றுக்கு முரணானது. அதன்படி இந்த quad camera setup ல் 48MP primary sensor paired with an 8MP wide angle lens, ஒரு 5MP macro lens மற்றும் ஒரு 2MP depth sensor இருக்கும்.
OnePlus Nord: Expected specifications
அந்த ரோமானிய விற்பனை தளத்தின்படி, OnePlus Nord ல் 6.55-inch Super AMOLED டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 765G processor ஆகியவை இருக்கும்.
முன்புறமுள்ள கேமரா sensor ஐ வைப்பதற்காக இந்த சாதனம் centered hole punch உடன் வரும் மேலும் இதில் 4,300mAh பேட்டரியும் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கைபேசி 5G சப்போர்டுடன் optical image stabilisation (OIS) அம்சத்துடன் வரப்போகிறது. மேலும் இந்த மாடல் கைபேசி bright நீலம், இலை பச்சை, கருப்பு மற்றும் சாம்பல் வண்ணங்களில் வரப்போகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil